H.ராஜாவின் மதவாத பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க அபூபக்கர் MLA வலியுறுத்தல்

30-01.2017 அன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் ஆளுனர் உரையின் விவாவதத்தில் பங்கேற்று பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசியதாவது

ஜல்லக்கட்டைப் பற்றியும் நமது ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டை வென்ற முதல்வர் என்ற சொல்லக்கூடிய அளவுக்கு அவருடைய பணி அமைந்திருக்கிறது. அதற்கு அவருக்கும், இந்த அரசாங்கத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்கு துணை நிற்கக்கூடிய வகையில் திறம்பட செயலாற்றக்கூடிய கழகத்தின் செயல் தலைவர் மட்டுமல்லாமல் போராட்டத்தலைவர் என பெயர் ஏற்றிருக்கக்கூடிய தளபதியார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த பேரவையில் அறிவித்தார்கள்.

அந்த விசாரணை முழுமையாக இருக்க வேண்டும்.
இந்த_விசாரணையை திசை திருப்பக்கூடிய வகையில் சில பேர் பேசி வருகின்றார்கள்.
குறிப்பாக மத்தியிலே ஆளக்கூடிய ஒரு பொறுப்பான கட்சியில் இருக்கக்கூடிய ஒருவரும் (Hராஜா) கூட இதே பிற பிரச்சினைகளோடு ஒப்பிட்டு சிறுபான்மை சமூகத்தினர்
மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
இந்த_ஆய்வில் அதனையும் உட்கொண்டு
உரிய நடவடிக்கை எடுக்க_வேண்டும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அரசு அறிவித்திருக்கின்றது. நிரந்தர தீர்வாக அரசே இந்த ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முடியுமா என்பதையும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
என தெரிவித்தார்

Comments

comments

Add Comment