கடையநல்லூரில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

கடையநல்லூரில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

கடையநல்லூர் பிப்: 12 திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமிய மாநாடு
இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது

கடையநல்லூர் யூனியன் அலுவலகம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்கு சார்பில் முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு இன்று இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது இதில் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்குகிறார் மாநில நிர்வாகிகள் நெல்லை யூசுப், செய்யதலி, மேலாண்மை குழு தலைவர் அப்துல் நாசிர் ஆகியோர் முன்னிலை வகிகிக்கின்றனர்

இந்த மாநாட்டை முன்னிட்டு
முஸ்லிம் மக்கள் மத்தியில் வணக்கத்திற்குறியவன் இறைவர் ஒருவனே, பின்பற்றுவதற்கு தகுதியானவர் முஹம்மது ரஸுலுல்லாஹ் மட்டுமே, மூடநம்பிக்கை, பில்லி, சூனியம், ஏவல் ,விலக்கல், நல்ல நேரம் ,கெட்ட நேரம் ,ஜோசியம், என்பது எல்லாம் கிடையாது என்றும் வட்டி வாங்குவது வரசட்சணை வாங்குவது கூடாது என்பதை விளக்கி இதில் மாநில துணைத் தலைவர் எம் ஐ சுலைமான், மாநில பொதுச் செயலாளர் முகம்மது யூசுப், நிறுவனத் தலைவர் பீ .ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் சிறப்புறையாற்றுகிறார்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

குர்ஆன் வசனங்கள் , நபி மொழி வாக்கியங்கள் எழுதப்பபட்ட சுவர் விளம்பரம், பிட்நோட்டிஸ், காலாண்டர் ,டோர் ஸ்டிக்கர் ,பைக் ஸ்டிக்கர் ,மேலும் உயிரூட்டப்பபட்ட உன்னத நபிமொழிகள், அன்னலாரின் அழகிய முன்மாதிரி ஆகியவை புத்தகவடிவிலும் வட்டி, வரதட்சணை மவ்லூதுக்கு மூடநம்பிக்கைக்கைகு எதிரான பிட் நோட்டிஸ்கள் ஆயிரக்கணக்கிள் வினியோகம் செய்தது.

மேற்கு மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு மாதமாக
இவ்வாறு பல்வேறு கோணத்தில் மாநாட்டை முன்னிட்டு அழைப்பு பணிகளை செய்து முடித்து விட்டு அதன் இறுதியாக இன்று கடையநல்லூர் மெயின் ரோடு கால்நடை மருத்துவமனை தென்புரம் இப்ராஹீம் நகரில் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நடை பெற்றதுஉள்ளது
இதில் மாநில துணைத் தலைவர் எம் ஐ சுலைமான், மாநில பொதுச் செயலாளர் முகம்மது யூசுப், நிறுவனத் தலைவர் பீ .ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் சிறப்புறையாற்றுகிறார்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Add Comment