கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு ஏற்பு

கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு ஏற்பு

கடையநல்லூர் பிப் 22: காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பத்மநாபபிள்ளை இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட நில மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சந்திர சேகர் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆய்வாளரா பொறுப்பேற்றுக்கொண்டனர்
அப்போது அவர் கூறியது அரசியல் கட்சிகள் ,சமுக நல அமைப்புகள், பொதுமக்கள்அனைவருமே போலிஸுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
காவல்துறை அனுமதி இல்லாமல் திடீர் என சாலை மறியலில் ஈடுபடுவது ஆர்பாட்டம்செய்வது போராட்டம் நடத்துவது போன்றவற்றில் ஈடுபட கூடாது எனவும் மேலும் நகரில் நடைபெறும் குற்றச் செயல்களை யார் ஈடுபட்டாலும் 24 மணி நேரமும் பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு புகாராக தெரிவிக்கலாம் என கூறி தனது செல் +91 94 98 193148 நம்பரையும் கொடுத்தார்.
காவல்துறை உங்கள் நண்பன் பழக இனிமை பணியில் நேர்மை என்ற காவல் நிலைய வாசகத்தின் அடிப்படையில் இவரின் செயல்கள் அமைந்தது.

போட்டோ எடுத்து போடுவதை இன்ஸ்பெக்டர் தவிர்தார் இருப்பினும் படத்துடன் செய்தி வெளியிடுவததுதான் நல்லது என்பதால் அவரின் படத்தை பொது மக்களுக்கு நாம் வெளியிடுகிறோம்.

-குறிச்சி சுலைமான்
உணர்வு செய்தியாளர்.

Add Comment