தாயே ! தமிழ்த் தாயே !

தாயே ! தமிழ்த் தாயே !
தாரணியில் முதல் தாயே !
மூச்சுக்கும் பேச்சுக்கும்
முன்பிறந்த மொழித் தாயே !

ஆதிமனி தன்பேசி
ஆனந்தப் பட்டமொழி
நீதிநெறி தந்தமொழி
நீயின்றி வேறுண்டோ ?.

சொல்லுக்கு சுவையூட்டி
சொக்கவைக்கும் வகைகாட்டி
வில்லுக்கும் buy Lasix online புல்லுக்கும்
வீர விதை தருகின்றாய் !

தேனும் தெவிட்டாத
தீங்கனி யும்கலந்து
திருநாவில் வந்தமர்ந்து
தெள்ளமுதாய் மலர்கின்றாய் !

உலகத்து மொழிகளுக்கு
ஊற்றானாய் உப்பானாய் !
எம்மொழிக்கும் முதலாக
செம்மொழியாய் நீயானாய் !

Add Comment