கடையநல்லூர் மக்களை ஏமாற்றும் சுகாதாரத்துறை

நமதூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு சுகாதார சீர்கேடே காரணம் எனக்கூறி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுவும் ஒருவகையில் நன்மையே! ஆனால் மற்ற ஊர்களை விட கடையநல்லூர் மக்கள் எவ்விதத்தில் நமதூரில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கிவிட்டார்கள் என பார்த்தால்…

மூடப்படாத கழிவுநீர் ஓடைகள் குறைவு…
திறந்தவெளி கழிப்பிடம் பெரும்பாலும் வழக்கொழிந்து வீட்டிலேயே கழிப்பறை வசதி வந்துவிட்டது….
குப்பைகள் தினந்தோறும் அகற்றப்படுகிறது…
ஃபேவர் ப்ளாக் செங்கல்களால் சாலைகளில் தண்ணீர் தேங்குதல் குறைந்துள்ளது..
.
ஒப்பீட்டளவில் பக்கத்திலுள்ள மற்ற ஊர்களை காட்டிலும் நல்ல நிலையிலேயே கடையநல்லூர் உள்ளது…

நல்லூரை விட சுகாதரம் குறைந்த , விழிப்புணர்வற்ற,திறந்த சாக்கடைகள் நிறைந்த, திறந்த வெளி கழிப்பிடம் நிறைந்த ஊர்களில் அதிகம் வராத டெங்கு இங்கே மட்டும் அதிகப்படியாக வருவது எப்படி வருகிறது?

“”அரசு கடையநல்லூரில் பரவுவது மர்மக்காய்ச்சல் என்று கூறிக்கொண்டே டெங்கு காய்ச்சல் கொசுப்புழுக்கள் வீட்டின் தண்ணீர் தொட்டிகளில் உருவாகிறது என்று அபராதமும் விதிக்கிறது. டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்க இதை செய்யவேண்டும் அதைச்செய்யவேண்டும் என்று விளம்பரம் செய்கிறது.””

“”அடேய் மர்மக்காய்ச்சலுக்கு எதுக்குடா டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கை””

என சட்டையை பிடித்து அரசுத்துறையை கேள்விகள் கேட்காததன் விளைவால்

காய்ச்சலுக்கும் டெங்கு கொசுப்புழு பெருக்கத்திற்கும் முறையான காரணத்தை கண்டறிய தவறிய நகராட்சி தன் தவறுகளை மறைத்து காய்ச்சலுக்கு காரணமே பொதுமக்களின் விழிப்புணர்வுயின்மை தான் என்ற பெரும் பொய்யை பொதுமக்களின் பொதுபுத்தியில் திணித்து விட்டது…

நாமும் நம்மையும் அறியாமல் அதை ஏற்கும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டோம்..

அதனால் தான் இன்னும் காய்ச்சலுக்கு நாம தான் காரணம் என்று நம்மை நாமே குறை கூறி நம்வீட்டு வாட்டர் டேங்கையும் , தண்ணீர் தொட்டியையும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்…

ஜல்லிக்கட்டு ஹைட்ரொ கார்பன் மற்றும் தாமிரபரணி போன்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நம்மால் நமதூர் மக்களை இந்த டெங்குவின் இருந்து காப்பாத்திட போராட முடியாதா?

அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல இயலகங்களின் தனித்தனி போராட்டத்தால் எந்த பயனும் இல்லை. மக்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.

இயக்க சார்பின்றி அரசியல் சாயமில்லாமல் அனைவரும் ஒன்று கூடி அறவழி போராட்டத்தை முன்னெடுப்போம். கடையநல்லூரில் உள்ள தீர்க்கப்படாத சுகாதார பிரச்னையையை அரசாங்கத்தின் காதுகளில் ஓங்கி ஒலிக்க செய்யவேண்டும்.

Kurinchi Sulaiman

Add Comment