ஒருகோடிப் பிரார்த்தனைகள் ! (பீ. எம். கமால், கடையநல்லூர்)

வல்லரசு நாடாக
வளர்ந்து வரும் இந்தியாவை
நல்லரசு நாடாக
நாம் காண வேண்டாமா ?

உபயோகப் பொருட்களின்
உற்பத்தி பெருகாமல்
ஊழல் அல்லவா
உற்பத்தி ஆகிறது ?

மனித நேயங்கள்
கைகோர்த்துக் கொள்ளாமல்
மதங்கள் அல்லவா
அரிவாள் ஏந்துகின்றன ?

உள்நாட்டு உண்டியலில்
சேகரம் Lasix online ஆகாமல்
அந்நிய வங்கிகளில்
ஆயிரம் கோடிகள் !

ஆகாயம் நோக்கி
விண்கலம் பறந்தாலும்
அநியாய விலைவாசி
அதையும் தாண்டுகிறது !

அமெரிக்கா புள்ளிவைக்க
ஆளும் வர்க்கத்தினர்
(அலங்) கோலம் போட்டு
ஆட்சி செய்கின்றார் !

ஓட்டுப் பிச்சை கேட்டு
ஒருகூட்டம் கையேந்த
இலவசப் பிச்சை கேட்டு
இந்தியன்கை ஏந்துகிறான் !

போக்கிரிகள் திருடர்கள்
புகுந்துவிட்ட அரசியலில்
தர்மங்கள் தலைகுனிந்து
தற்கொலையால் மடிந்தன !

எப்போது இந்தியா
நல்லரசு ஆகுமென்று
எப்போதும் இந்தியன்
கனவு காணுகின்றான் !

விழித்த நிலையில்
கனவு காண்பவனே !
உன்கனவு நிறைவேற
ஒருகோடிப் பிரார்த்தனைகள் !

Add Comment