முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத்தல்

“மாநில சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லீம்களுக்கென்று தனி இடஒதுக்கீடு செய்யப்படவேண்டும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இன்று நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் முலாயம் பேசுகையில்,

“மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. 14 முக்கிய மாநிலங்கள் சார்பாக Buy Cialis மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம். இந்த நிலை மாற வேண்டுமானால், மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.” என்று கருத்து பதித்துள்ளார்.

Add Comment