என் ஜன்னல்…

திறந்தே வைத்தேன் என் அறையின் ஜன்னலை…

அவள் மேனி தொட்ட காற்று என் சுவாசம் வருமென்று!
வந்தமரும் சிறு பறவை அதில் தூது வருமென்று!
வாசல் தெளிக்கச் செல்கையில், பல் துலக்கியபடி புன்னகைக்க!
மொட்டை மாடி துணி உலர்த்தயில் ஓரப்பார்வை விழு மென்று!
திறந்தே வைத்தேன் என் அறையின் ஜன்னலை!.

ஊரெல்லாம் பண்டிகை கேளிக்கையில், நான் மட்டும்
ஜன்னலோரம் தனித்திருந்தேன் அறியாததேனோ?
எட்ட நின்றே ரசித்தாலும், அவளருகில்
நிழலாய் நானிருந்தேன் உணராததேனோ?

காற்றுக்கும், பறவைக்கும் புரிந்த என் காதல்,
கள்ளி அவளின் நெஞ்சிற்கு புரியாததேனோ?
காத்திருந்த போது வந்த கவிதையெல்லாம்
கண்ணீரால் அழிந்தது தெரியாததேனோ?

போதும் போதும்
இனி பொறுத்தல் ஆகாது! என் ஜன்னல் கூட பொறுமை காக்காது!
சொல்லி விடலாம் என்றெண்ணிய போது
சொல்லியே விட்டாள் அவள் “எனக்கு கல்யாணம் அவசியம் வாங்க”..

அப்போதிலிருந்து, Buy Ampicillin
என் அறையின் ஜன்னலை மூடியே வைக்கிறேன்..
எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கும் அவள் மேனி தொட்ட காற்றும்
அவளை போல் என்னை நீங்கி விடக்கூடாதென்று…

Add Comment