சட்டமன்றத்தில் சாதிக்க முடியாததை சர்வகட்சியை வைத்து சாதிக்கமுடியுமா

கடையநல்லூர் புதிய தாலுகா கட்டிட விவகாரம் எம்.எல்.ஏ .வின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா?
————————————————–
சட்டமன்றத்தில் சாதிக்க முடியாததை

சர்வகட்சியை வைத்து சாதிக்கமுடியுமா

இன்றைய போராட்டம் வெல்லுமா

கடையநல்லூர்:மே15
கடையநல்லூர் புதிய தாலுகா கட்டிடம் நகரத்திற்குள் அமைய வழியுறுத்தி எம். எல். ஏ. முகம்மது அபூபக்கர் தலைமையில் இன்று போராட்டம் நடக்க உள்ளது தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு அப்போதைய சட்டமன்த்தில் கடையநல்லூரை தலைமை யிடமாக கொண்ட புதிய தாலுகா அலுவலகத்தை அறிவித்து 2015 ஆண்டு ஜுன் மாதத்தில் புதிய தாலுகாவையும் துவக்கியும் வைத்தார் அவசரகதியில் அறிவிக்கப்பட்டதால் முறையான கட்டிடவசதிகளின்றி கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பணை கட்டிடடத்தில் தற்காலியமாக செயல் பட துவங்கியது இந் நிலையில் தாலுகாவிற்கான புதிய கட்டிடம் மக்கள் சென்று வர லாயக்கற்ற அதே நேரம் பாதுகாப்பில்லாத நகருக்கு வெகு தூரம் உள்ள சமுகவனக்காடுகளில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது அதற்காக வருவாய்துறையில் நிர்வாக கோப்புகளிலும், நில அளவை வரைபடங்களிலும் பல்வேறு சட்ட திட்ட மாறுதல்களை செய்து கட்டிடம் அமைவதற்கான இடங்களையும் தேர்வு செய்து விட்டனர்

எதிப்பு
———
இதற்கு பொதுமக்கள்,சர்வகட்சியினர், மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது ஆர்ப்பாட்டம் ,உண்ணாவிரம் என பல்வேறுவகையிலும் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்தும் பலன் இல்லை இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடையநல்லூர் தொகுதி எம். எல் . ஏ .வும் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் நகர மையப்பகுதியில் அமைய வலியுறுத்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பினர் அதற்கு வருவாய்துறைஅமைச்சர் உதயகுமாரும் பதிலளிக்கையில் கோரிக்கை பரிசிலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கவனஈர்ப்புஆர்ப்பாட்டம்
—————————-

அரசு மனோகல்லூரிக்கட்டிடம் நகரின் மையப்பகுதியில் அமைக்க கோரி பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் எம்.எல்.ஏ.வும் கொடுத்த கோரிக்கைகளுக்கு எல்லாம் இதை போல் அரசு உறுதியளித்து பின்னர் சில நாட்களிலேயே கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு அரசு நினைத்தபடி எப்படி அரசு மனோகல்லூரி கட்டிடத்தை காட்டுப்பகுதியில் அமைத்ததோ அதுபோல் புதிய தாலுகா க ட்டிடம் அமைக்கும் விசயத்திலும் தமிழகஅரசு வழக்கமான நிலைபாட்டில் சென்று விடுமோ என கருதி புதிய தாலுகா அலுவகத்தை அட்டக்குளத்திற்கு எதிரே உள்ள வருவாய் அலுவலககட்டிடடத்தை யொட்டி அமைக்க இடம் தேர்வு செய்ய வலியுறுத்தி இன்று தொகுதி எம்.எல்.ஏ. முகம்மது அபூபக்கர் தலைமையில்சர்வகட்சியினர் கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு காலை 11மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மொத்ததில் சட்டமன்றத்தில் சாதிக்கா முடியாத கோரிக்கையை சர்வகட்சி மூலம் சாதித்துவிடலாம் என கருதும் எம்.எல் .ஏ.வின் நியாயமான கோரிக்கையை அரசு கவனம் கொள்ளுமா?இன்றைய போராட்டம் வெல்லுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்…
-குறிச்சி சுலைமான்.

Add Comment