கடையநல்லூர் எம்எல்ஏ கலெக்டரை சந்தித்து கோரிக்கை

நெல்லையில் இன்று (30/06/17)
கடையநல்லூர் எம்எல்ஏ
முஹம்மது அபூபக்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து #கடையநல்லூர்_தாலுகா அலுவலகம் நகரின் எல்லையில் அமைத்திட கேட்டுக் கொண்டார். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
மேலும்
#வழிபாட்டு_தலங்கள், #பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள #டாஸ்மாக்_கடைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதேபோல் தொகுதி யில் உள்ள
#அனைத்து_குளங்களையும் #தூர்வார வேண்டும் என்றும் தன்னால் ஆன முழு ஒத்துழைப்பு இருக்கும் என கூறினார்.

#வழிபாட்டு_தலங்களில்
#கூம்பு_வடிவ_ஒலிபெருக்கியை #நீக்க_காவல்துறையினர் #வலியுறுத்துவதை_நிறுத்த #வேண்டும் என்றும்
நீதிமன்ற உத்தரவு படி சப்த்த அளவை 70 டிசிபில் கீழ் வைக்க வேண்டும் என்று தான் உள்ளது நீக்க வேண்டும் என்று கூறவில்லை என நீதிமன்ற உத்தரவு நகலை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார் . எஸ்.பி.யிடம் கலந்து பேசி முடிவு சொல்வதாக கூறினார்.
நாளை (01/07/17) காலை கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை சம்பந்தமாக எஸ்.பி அவர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

Add Comment