பாஜக நிர்மலா சீத்தாராமனின் பிதட்டல்…

பாஜக நிர்மலா சீத்தாராமனின் பிதட்டல்…

GST வரி விதிப்பின் மூலம் விலைவாசி உயராது என்று சொன்னார் பாஜக நிர்மலா சீத்தாராமன்.  நிர்மலாவின் முகத்தில் செருப்பால் அடித்ததைப் போல பல ஊர்களில் டீ விலையை உயர்த்தி அறிவித்துள்ளார்கள் டீ கடை வியாபாரிகள்.

செல்போன் நிறுவனங்கள் தாங்கள் வழங்கி வந்த சலுகைகளை உடனடியாக பறித்துக் கொண்டன. 110 ரூபாய்க்கு முழு டாக்டைம் கொடுத்த செல்போன் நிறுவனங்கள் 10 ரூபாயை அபேஸ் செய்து 100 ரூபாய் ஆக்கி விட்டன. 143 ரூபாய்க்கு 7 GB நெட் வழங்கிய செல்போன் நிறுவனங்கள் அதற்கு 20 ரூபாய் அதிகப்படுத்தி 163 ஆக விலையை உயர்த்தி விட்டார்கள். 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இதுவரை 7.50 கொடுக்கப்பட்ட டாக்டைம் இனி 6 ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

10 ரூபாய் மதிப்பில் விற்கப்படும் பேனாக்கள் 50 கொண்ட பார்சலுக்கு 10 பேனாக்களை இலவசமாக வழங்கிய கம்பெனிகள் இப்போது அந்த 10 இலவச பேனாக்களை நிறுத்தி விட்டார்கள். ஏற்கனவே காங்கிரஸ் அரசில் கொண்டு வரப்பட்ட 14% வாட் வரி மக்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 100 கிராம் எடை கொண்ட சக்ரா கோல்டு, த்ரீ ரோசஸ், ஏவிடி போன்ற தேயிலை பாக்கெட்டுகள் தங்களின் விலையை உயர்த்தவில்லை. மாறாக சத்தமே இல்லாமல் 15 கிராமைக் குறைத்து 85 கிராம் அளவில் பாக்கெட் போட்டார்கள். அதுபோல குளோஸ்அப், கோல்கேட் போன்ற டூத்பேஸ்ட்டுகள் அளவும் 85 கிராமாக குறைந்து போனது.

வாட் வரியை விட பண்மடங்கு வேகம் கொண்ட GST வரியால் நாடே ஆட்டம் கண்டுவிடும். GST வரியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் இப்போது அமுல்படுத்தப் போகும் GST வரி மாட்டு பாஜகவால் தயாரிக்கப்பட்டது. காங்கிரஸ் தயார் செய்து வைத்திருந்த GST வரிவிகிதம் 18% மேல் இல்லை. ஆனால் 28% கொடுமையான வரியை மாற்றிக் கொண்டுவந்ததுள்ளது மாட்டு பாஜக அரசுதான்.

உறுகாய் பொட்டலம் உற்பத்தி செலவு 50 பைசாவாக இருக்கும், அது ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. சாதாரண பொட்டல ஊறுகாயை உற்பத்தி செய்வது சாமானிய குடிசைவாழ் மக்களே! ஆனால் அவர்களுக்கு 18% வரி என்பது எவ்வளவு அயோக்கியத்தனம். அதுபோல இட்லிமாவு சாதரண பொட்டலத்தில் போட்டு விற்றால் வரி இல்லை, ஆனால் முத்திரை லோகோ போட்டு விற்பனை செய்தால் அவர்களுக்கு வரி உண்டு. கடலை மிட்டாய், தேன்மிட்டாய், சிறு கேக், மிக்சர் என ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு GST அபாய மணி அடிக்கின்றது.

தீப்பெட்டிக்கும், பட்டாசுக்கும் கடும் வரி விதித்து சீனாவிற்கு தீப்பெட்டி காண்டிராக்டை கொடுக்கத் திட்டமிட்டு விட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே எல்லையில் அட்டூழியம் செய்யும் சீன ராணுவத்திற்கு பரிசாக தீப்பெட்டி காண்டிராக்டை கொடுத்து இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்களை அழிக்க GST வரி அமுலாக்கப்படுகின்றது, இந்திய தீப்பெட்டி இனி 2 ரூபாய்க்கு கிடைக்கும், ஆனால் சீனாவில் இருந்து வந்த தீப்பெட்டி 1 ரூபாய்க்கு விற்கப்படலாம்.

கார், ஏசி, ராயல் எண்பீல்டு பைக், டிவிஎஸ் பைக், பீட்சா போன்ற பரம ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வெறும் 5% வரி என கூறப்படுகிறது. ராயல் எண்பீல்டு புல்லட்டும், டிவிஎஸ் கம்பெனியும் முன்கூட்டியே 5 ஆயிரம் வரை விலைகுறைப்பு செய்து விட்டது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா தூக்கி வீசப்பட்டு விட்டது, அதுபோதாது என இப்போது GST மூலம் இந்தியாவை சோமாலியா அளவிற்கு கொண்டுபோய் விட வேண்டும் என்று ஊர்சுத்தி மோடி உழையாய் உழைக்கிறார்.

இந்தியா இனி……………!?!
வாட்ஸ் அப்..

Add Comment