MGR வழியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும்- அபூபக்கர் MLA

MGR வழியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும் சட்டமன்றத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றத் தலைவர் முஹம்மது அபூபக்கர் வேண்டுகோள்

தேசிய ஒருமைப்பாடு -சமய நல்லிணக்கம் – தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் கலாச்சார தனித்தன்மைக்காக அரும்பாடுபட்ட ஒரு மிகப் பெரிய தலைவரும் நமது MGR அவர்களும் இணைந்து தோலோடு தோல் நின்று உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என இணைந்த காட்சி

அவர் வேறு யாருமில்லை தந்தையின் வழியில் அவரின் உறுதியான கொள்கையுடன் இன்று இந்திய ஜனாதிபதி தேர்தலில் மதசார்பற்ற 17 கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திருமதி மீரா குமார் அவர்களின் தந்தை பாபு ஜகஜீவன்ராம் அவர்களும் நமது புரட்சித் தலைவர் அவர்களும் இருக்கும் அந்த புகைப்படம் தான்.

8வது வள்ளல் MGR என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது

MGR அவர்கள் வழியில் அவர்களின் தொண்டர்களும் மீரா குமாருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்

Add Comment