கடையநல்லூரில் டயாலிஸிஸ் சென்டர்

கடையநல்லூரில் டயாலிஸிஸ் சென்டர்

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி
கடையநல்லூர் அரசு மருத்துவ மனைக்கு கிட்னி நோயாளிகள் பயன் பெறும் வகையில் டயாலிஸிஸ் சென்டரை உருவாக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அதனடிப்படையில் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு இரண்டு டயாலிஸிஸ் இயந்திரம் அமைக்க கட்டமைப்பு பணிகளை அரசு ஏற்படுத்தியது.

ஒரு டயாலிஸிஸ் கருவி வாங்க தனது
சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் ஒதுக்கினார்

மற்றொரு கருவியை நேற்று (04.06.17) நடைபெற்ற மானியக் கோரிக்கையின் பதிலுரையில் அமைச்சர் நிதி ஒதுக்கி அறிவிப்பு செய்தார்.

கடையநல்லூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு 79 டயாலிஸிஸ் கருவிகளுக்கு 6.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Add Comment