கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் அபாயத்திற்கு தீர்வு காண அபூபக்கர் MLA சட்டசபையில் வலியுறுத்தல்

தமிழக சட்டமன்றத்தில் 04.07.2017 அன்று நடைபெற்ற சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-

மாண்புமிகு பேரவைத்துணைத் தலைவர் அவர்களே,

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு உங்களுக்கும், அதே போல் மானியக் கோரிக்கையிலே பதில் அளிக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், துறை சார்ந்த செயலாளர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவாக மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களும் அதோடு சிறிய சிகிச்சைக்காக வேண்டி அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் அவர்களும் விரைவாக குணம்பெற்று அவைக்கு வர நானும் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

அரசின் மருத்துவ உதவி கிராமங்களுக்கு சென்றடைய வேண்டும்
கொள்கை விளக்கக்குறிப்பில் நடமாடும் மருத்துவமனையைப்பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த நடமாடும் மருத்துவமனை திட்டத்தை கிராமங்கள், வனப்பகுதி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் இதனை விரிவுப்படுத்தினால் அந்த மக்களுக்கு எல்லாம் பயனுள்ளதாக இருக்கும். என்னுடைய தொகுதிக்குக்கூட அந்த திட்டத்தைப்பயன்படுத்தும்போது அந்த பகுதி மக்கள் எல்லாம் பயன்பெறக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

அதை செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்தி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதே போல் First Responder Bike Ambulanace இரு சக்கர அவசர கால ஊர்தி திட்டம் என்பது ஒரு நல்ல திட்டம். கிராம மக்கள், வனப்பகுதி மக்கள் இந்த திட்டத்தின் மூலம் முழுமையாக பயன்பெற்றால் நன்றாக இருக்கும். ஏனென்று சொன்னால் அந்த கிராமங்களிலே வனப்பகுதியிலே தற்போது Mobile Ambulance மூலமாக வாரத்திற்கு இரண்டு முறையோ, மூன்று முறையோதான் அங்கே மருத்துவர்கள் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இருப்பதினால். இந்த திட்டத்தின் மூலமாக எளிதில் அங்கே சென்று அவர்களுக்கு மருத்துவ உதவி எல்லாம் செய்ய முடியும். அதையும் ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

திருத்தி அமைக்கப்பட்ட பள்ளி சுகாதாரத்திட்டம். இந்த திட்டத்தை எல்லா பள்ளிக் கூடங்களிலும் வாரத்திற்கு இரண்டு முறையோ, மூன்று முறையோ மாணவர்களையெல்லாம் பரிசோதனைக் செய்யக்கூடிய திட்டமாக இதனை மாற்றியமைத்தால் நன்மை பயக்கும் என்பதையும் இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

தமிழகத்தில் சி.ஹெச். முஹம்மது கோயா மையத்தைபோல் வசதி வேண்டும்

அந்த கொள்கை விளக்கக்குறிப்பில் மதுரை, தஞ்சாவூர், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் புற்று நோய்க்கான ஒரு மையத்தை 60 கோடி ரூபாயில் துவங்க அறிவித்திருக்கின்றீர்கள். இது ஒரு நல்ல திட்டம். ஏற்கனவே மண்டல கேன்சர் சென்டர் ((RCC)) திருவனந்தபுரம், பெங்களூர், கொல்கொத்தா, மும்பையில் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் செல்லக்கூடியவர்களுக்கு வெளியில் மருத்துவம் செய்வதைவிட அங்கே 10 சதவீதம்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதைப்போன்று ஒரு தரம் வாய்ந்த கேன்சர் சென்டரை இந்த மையங்களில் உருவாக்குவதோடு திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் மருத்துவத்திற்காக செல்கிறார்கள். ஆனால் கேன்சர் போன்ற நோய்கள் ஒரு நாளில் குணப்படுத்திவிட முடியாது. பல நாட்கள் அங்கே தங்கி பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே இந்த மையங்களில் எல்லாம் தங்கும் வசதி, உணவு போன்ற வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கே கூட

எங்கள் கட்சியின் சார்பாக கேரளாவின் முன்னாள் முதல்வர் சி.எச். முஹம்மது கோயா சென்டர் என்ற பெயரில் அந்த கேன்சர் நோயாளிகள் தங்குவதற்கு தனியறை அவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு போன்றவைகளெல்லாம் வழங்குகின்றோம். அதை நாம் அரசாங்கத்தின் சார்பாகவே இந்த கேன்சர் சென்டர்களை ஏற்படுத்தினால் மக்களின் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதை என்னுடைய தாழ்மையான கருத்தாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

கொள்கை விளக்கக்குறிப்பு 211வது பக்கத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேர பிரசவ சேவை ஏற்படுத்தி தரப்படும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. என்னுடைய கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட புளியரையில் மகப்பேறு பெண் மருத்துவர் இல்லாமல் குறைப்பாட்டை தொடர்ந்து நான் ஒரு வருடமாக இங்கே சொல்லி வருகிறேன். இந்த முறையாவது நீங்கள் அறிவிப்பு செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

நெல்லை மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் எல்லாம் செய்யப்பட்டு அங்கே பணிகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாநகராட்யில் தூய்மை நகரமாக மாற்றக்கூடிய பணியின் காரணமாக அங்கே உள்ள குப்பைகளை எல்லாம் எடுத்து செல்லக்கூடிய பணி நடைபெறுகின்றது. 10 தொகுதிக்கும் உள்ள மாவட்ட மருத்துவமனை திருநெல்வேலி மருத்துவமனையாகும். அங்கே ஒரு திடக்கழிவு மேலாண்மை (Solit Waste Management) ஏற்படுத்தினால் அங்கே இடம் உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அங்கு அந்த திட்டத்தை நிறைவேற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே சுகாதாரம் முயற்சி திட்டம்
ஒரே சுகாதார முயற்சி தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக துவக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக் கின்றது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு அங்கே ஒரே சுகாதார முயற்சியிலே மனிதர்கள் சுகாதாரம் விலங்குகள் சுகாதாரம் மற்றும் சுற்றுப்று சுகாதாரம் அனைத்தும் இந்த மூன்றையும் ஒரே நிலையிலேயே செய்யக்கூடிய ஒரு நல்ல திட்டமாகும்.

இதை எங்கெல்லாம் அதிகமான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ. அந்த இடங்களிலே செயல்படுத்தலாம். குறிப்பாக என்னுடைய கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலுடைய அபாயம் அந்த கொசுக்களுடைய நோயால் ஏற்படக்கூடிய ஒரு அபாயம் இருப்பதன் காரணமான இந்த திட்டத்தை கடையநல்லூர் நகராட்சியிலேயே செயல்படுத்தினால் நன்மை பயக்கும் என்பதையும் இங்கே நான் தெரிவித்து கொள்கிறேன்.

கொள்கை விளக்கக் குறிப்பிலேயே உணவே மருந்து-மருந்தே உணவு என்பது ஒரு அருமையான தத்துவம்தான். ஏனென்று சொன்னால் இன்று பல்வேறு மருந்துகள் மிக அதிகமான விலையிலேயே விற்கப்படுகின்றன. தரமில்லாததாகவும் இருக்கின்றன. என்ற சந்தேகம் இருப்பதின் காரணமாக மக்கள் எல்லாம் ஜெனட்ரிக் மெடிசின் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றது. அதே போல ஆர்கானிக் புட் இயற்கை உணவு மூலமாக அந்த பழக்கத்தை எல்லாம் அவர்கள் ஆர்வப்படுத்தி வருகிறார்கள். அதுபோன்ற நல்ல திட்டங்களை அரசினுடைய திட்டமாக ஏற்று கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை
அதே போல எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையிலேயே அமைய வேண்டும். தமிழகத்தினுடைய 25 சதவீத மக்கள் மதுரைக்கு அந்தப் பக்கம்தான் இருக்கிறார்கள். 10க்கு மேற்பட்ட மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். எனவே அதையும் இந்த அரசாங்கம் வலியுறுத்தக்கூடிய வகையிலே நீங்கள் அதை செயல்படுத்த வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
காயல் மருத்துவமனையில் வசதிகள்
எனது சொந்த ஊர் காயல்பட்டினம். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணன் இருக்கிறார்கள். காயல்பட்டினத்தை பொறுத்த வரையிலும் 45 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள அரசு மருத்துவமனையைதரம் உயர்த்தி அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்தி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
தென்காசி-மதுரை நான்கு வழிப்பாதை

அதிகமாக விபத்துக்கள் நடக்கக்கூடிய பகுதியாக தென்காசி, மதுரை, தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. அதை நான்கு வழிப் பாதையாக மாற்றக் கூடிய ஒரு திட்டம் இருந்து வருகிறது. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இலாகாவாக இருப்பதினால் அதை கணிவோடு பரிசீலித்து தென்காசி, மதுரை நான்கு வழிப்பாதை திட்டத்தை விரைவாக நீங்கள் அறிவிப்பு செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்பு

பல்வேறு ஆலைகள் ஆங்காங்கே இருக்கின்றன. அந்த ஆலைகள் மூலமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதை அவ்வப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடியிலே இருக்கக்கூடிய ஸ்டெர் லைட் ஆலை 1993ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையிலே பல்வேறு ஐயப்பாடுகள் மக்கள் எல்லாம் போராடக்கூடிய சூழ்நிலையில் 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றக்குழு ஆய்விலே இந்த ஆலைகள் உற்பத்தி விரிவாக்கம் பொதுக்களுடைய நலனுக்கு உகந்தது அல்ல என்ற தெரிவிக்கப்பட்டிருப்பதோடு நீதிபதிகள் தர்மாராவ், பால் வசந்தகுமார் போன்றவர்கள் விதி மீறல்களால் ஆலையை மூட வேண்டும் என்று அறிவித்திருக்கின்றார்கள்.
நீரி சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்புக் கூட பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலே இங்கே கழிவுகள், ஆர்கானிக் போன்ற வேதிப்பொருள் போன்றவைகளும் பற்களை அரிக்கும் புரோனைட் தாமிரம் போன்றவைகள் இங்கே தயாரிக்கப்படுவதனால் மக்களுக்கு இடைஞ்சல் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆலையின் மூலமாக வெளியேற்றக்கூடிய அந்த கசிவின் காரணமாக கேன்சர், கிட்னி, சுவாசக்கோளாறு, கருச்சிதைவு, மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. மேலும் இந்த ஆலைக்கு நாம் தாமிரபரணி ஆற்றிலிருந்து 1 கோடி லிட்டர் தண்ணீர் கூட கொடுக்கின்றோம். இப்படி எல்லாம் வசதிகளும் கொடுத்தும் கூட மக்களுக்கு அபாயமாக இருக்கக்கூடிய இந்த ஆலை.
காயல் டி.சி.டபிள்யூ ஆலை மீது நடவடிக்கை
இதே போன்று எங்களுடைய காயல்பட்டினம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சாகுபுரம் பகுதியில் இருக்கக்கூடிய டி.சி.டபிள்யூ. தாரங்கதார கெமிக்கல் ஒர்க்ஸ் மூலமாகவும் இதுபோன்ற அபாயங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதை அரசு கணிவோடு கவனித்து மக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்தி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

மாண்புமிகு பேரவை துணைத்தலைவர் அவர்கள், மாண்புமிகு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நீங்கள் பேச ஆரம்பித்து 9 நிமிடங்கள் ஆகிவிட்டன.
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாண்புமிகு பேரவைத்துணைத்தலைவர் அவர்களே, இப்போதுதான் நான் ஆரம்பித்திருக்கிறேன். சஜ்ஜஷன்தான் சொல்கிறேன். கட்சிக்கு ஒரு ஆள்தான் சார். ஒருசில விஷயங்கள்தான். உரையை உடனே முடித்து விடுகிறேன்.
மாண்புமிகு பேரவைத்துணைத்தலைவர் : மாண்புமிகு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச ஆரம்பித்து 9 நிமிடங்கள் முடிந்துவிட்டது.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: தயவு செய்து மிகவும் கடமையாக இருக்காதீர்கள்.
12ம் வகுப்பு மாணாக்கள் படிப்பை தொடர வேண்டும்

அதே போல நம்முடைய மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள் கல்வி புரட்சியை மேற்கொண்டு வருகிறார்கள். 12 ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்லூரிகளிலே இடம் கிடைப்பதில்லை. அவர்கள் டிராப் அவுட் ஆகாமல் இருப்பதற்கு எதாவது ஒரு திட்டத்தை நீங்கள் அறிவித்தால் நன்மை பயக்கும். மாற்று முறையிலான மருத்துவத்திற்கு இந்த அரசாங்கம் அங்கீகாரம் வழங்க வேண்டும். அக்கு பஞ்சர், அக்கு பிரஷ்சர் போன்ற மருத்துவதத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமையல் தொழிலாளர் நலவாரியம் செயல்பட வேண்டும்

தமிழ்நாடு சமையல் தொழிலாளர் நலவாரியம் அரசாணை எண்:102/2015யில் அறிவிக்கப்பட்டு செயல்படாமல் இருக்கிறது. அதையும் நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊனமுற்றோர்களுக்கு மூன்று சக்கர வாகனம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவதற்கு வழிவகைகள் உள்ளன. ஆனால் கடுமையான நடைமுறைகள் இருப்பதால் நான் 12 பேரை பரிந்துரை செய்தும் கூட அரசாங்கம் 2 பேருக்குத்தான் கொடுத்திருக்கிறது. அதற்கென எதாவது ஒரு திட்டத்தை கொடுத்தால் ஊனமுற்றோர்கள் எல்லாம் பயன்பெறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவைக்குழு செயல்பட வேண்டும்
நமது சட்டமன்ற அவைக்குழு என்னாச்சி என்பதே தெரியவில்லை. ஒரு கூட்டமும் நடைபெறவில்லை. அது செயல்படக்கூடிய வகையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சேர்வலாறு அணை தண்ணீர் 14 அடி வீணடிப்பு
ஏற்கனவே நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன். நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணைக்கட்டில் பராமரிப்புப் பணி நடைபெறுவதாக கூறப்பட்டு 14 அடி தண்ணீர் வீணடிக்கப்பட்டிருக்கிறது. குடிதண்ணீருக்கு நாம் எல்லோரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்-போராடிக்கொண்டிருக்கிறோம். இறைவனுடைய அருளால் அங்கு மழைபெய்ந்து தண்ணீர் வருகிறது என்றால் அந்த தண்ணீர் எல்லாம் வீணடிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய இலாகாவாக இருக்கின்ற காரணத்தால் அவையெல்லாம் சரிசெய்யக்கூடிய வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ரோஹிங்யா அகதிகளுக்கு உதவி

இலங்கை தமிழர் அகதிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றோம். அதைப்போல 2012ம் ஆண்டு பர்மாவில் ஏற்பட்ட கலவரத்தால் ரோகிங்யா அகதிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் கேலம்பாக்கம் பகுதியிலுள்ள சைக்லோன் ஷெல்டர் புயல் பாதுகாப்பு மையத்தில் 94 பேர் இருக்கின்றார்கள். 19 குடும்பத்தினர்கள் 47 பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக மின் இணைப்பு, தண்ணீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆதார் கார்டுகள் கூட வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களுடைய இருப்பிடத்தை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்த 94 பேருக்கு இரண்டே இரண்டு கழிப்பறைகள்தான் உள்ளன. அதையும் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினால் சுயமாக சம்பாதிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த முடியும் என்பதை தங்களுடைய மேலான கவனத்திற்கு அறியத்தருகிறேன்.
மாண்புமிகு மாற்றுத்தலைவர் (பி.எம். நரசிம்மன்) இன்னும் இரண்டு உறுப்பினர்கள் பேச வேண்டும் உரையை முடியுங்கள்.
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நான் கொஞ்ச நேரத்தில் உரையை முடித்து விடுகிறேன். அவர்கள் தினமும் பேச முடியும். நான் ஒரு ஆள்தான். பேச வாய்ப்பு நான்கு நாட்கள்தான்.
தலைவர் பேராசிரியரின் புதுகை மாவட்ட அமைச்சர்
கிட்னி டையாலிசிஸ் சென்டர் அமைத்து தரப்படும் என்ற அறிவிப்பை நான் எதிர்பார்கின்றேன். செங்கோட்டை மருத்துவமனை சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லை. அதே போல வடகரை, வாவா நகரம், கடையநல்லூர் இக்பால் நகர், கல்லம்புலி ஆகிய ஊர்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர வேண்டும். இந்த கோரிக்கை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். ஒரு வார காலமாக சுகாத்தாரத்துறை அமைச்சர் மிகப் பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் எங்களுடைய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுடைய சொந்த மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். ஏற்கனவே அடவிநயினார் சுற்றுலாத்தளமாக அறிவிக்கப்படும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. எங்களுடைய தலைவருடைய மாவட்டம் நீங்களாவது கருணையோடு செய்வீர்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கிறது.
சிறுபான்மையினர் வழிபாட்டு உரிமை பாதுகாப்பு
அதேபோல, அருமையான பெருமக்களே, சமுதாயம் சார்ந்த ஒரு பிரச்சினையை சொல்கிறேன். மாண்புமிகு முதல்வர் அவர்கள் நோன்பு திறப்பு இப்தார் நிகழ்ச்சியில், சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதற்கு நன்றி.. ஆனால், இப்பொழுது என்ன நிலைமை? பள்ளிவாசல்களில் இருக்கக்கூடிய கூம்பு வடிவிலான குழாய்களை, (nடிiஉந யீடிடடரவiடிn) என்ற அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள், கூம்பு வடிவிலான அந்த குழாய்களை எடுக்க வேண்டும் என்பதில், பல்வேறு நீதிமன்றங்களும் பல்வேறு மாதிரியான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், அளவைக் கட்டுப்படுத்தப்படலாம், இல்லையெனில் தடை செய்யலாம் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை அதிகாரி அவர்கள், கடந்த ஒரு வாரகாலமாக கடுமையான நடிவடிக்கையை எடுத்து, கேஸ் போட்டிருக்கிறார்கள். அரசாங்கம்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும். சப்தத்தைக் குறைக்கலாம், தொழுகையை மட்டும் செய்யலாம் என்று சொல்லலாமே தவிர, ஒட்டுமொத்தமாக குழாயை எடுங்கள் என்று சொன்னால், எப்படி தொழ முடியும், ஒரு நாளைக்கு 5 தடவை தொழுகிறோம், பாங்கு சொன்னால்தான் தொழ முடியும். அரசாங்கம் மேலும் மௌனமாக இருக்காமல், தொடர்ந்து நீங்கள் எப்படி அறிவித்தீர்களோ, அந்த அடிப்படையில் எங்களுடைய வழிபாட்டு உரிமைகள் நீங்கள் பாதுகாக்கக்கூடிய வகையில், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாண்புமிகு மாற்றும் தலைவர்( திரு. பி.எம். நரசிம்மன்) சீக்கிரம் உரையை முடியுங்கள்.
திரு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாட்டுக் கறி பிரச்சினையால் வட மாநிலங்களில் 4 பேர் இறந்துவிட்டார்கள். தமிழ்நாடு அரசாங்கள் இதில் கவனம் செலுத்தி, சிறுபான்மையினர்களுடைய உரிமைக்காக பணியாற்ற வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்கிறேன். வக்ஃப் வாரியம் 14 மாதங்களாக தலைவர் இல்லாமல் இருக்கிறது. அதற்கு விரைவாக நடவடிக்கை வேண்டும்.

இராமநாதபுரம் பா.ஜ.க. கூட்டத்தில் பேசியவர் மீது கடும் நடவடிக்கை
இராமநாதபுரத்தில், மத்தியில் ஆளக்கூடிய கட்சி பொதுக்கூட்டட்தில் கடுமையான முறையில் சிறுபான்மையினர்களுக்கு எதிராக, இராமநாதபுரம் அமைச்சருக்கு எதிராக கடுஞ்சொற்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அந்த நடவடிக்கையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும், இல்லையெனில் அதுவே பிரச்சினையாக்கிவிடும் என்பதை இங்கே உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். அதேபோன்று, வழிபாட்டு உரிமைகள் சம்பந்தமாகவும் ஒரு தெளிவான அறிவிப்பை மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தால்தான் அந்தப் பிரச்சினை முடிவிற்கு வரும். ஏற்கெனவே, திருப்பூரில் பள்ளிவாசலுக்கு இடம் ஒதுக்கி அங்கே பிரச்சினை. பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாத அளவிற்கு ஆக்கிவிட்டார்கள்.
எம்.ஜி.ஆர். வழி வந்தவர்கள் பாதை மாறலாமா?

திரு. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: ஒரேயொரு கோரிக்கை, வேறு ஒன்றும் இல்லை. நம்முடைய மானியக் கோரிக்கையிலே புரட்சிட்தலைவர் எம்.ஜி.ஆர், அவர்களுடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். என்ற ஒரு புத்தகம் மணவை பொன்மாணிக்கம் என்பவருடைய தொகுப்பிலே வழங்கப்பட்டது. நல்ல செய்திகள் எல்லாம் இடம்பெற்றிக்கின்றன. நானும்கூட பல்வேறு செய்திகளைப் படித்தேன். நன்றி. அதில் பக்கம் 46-லே காகித அம்புகள் பக்கத்திலே ஒரு அற்புதமான படம். தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களுடைய கலாச்சார தனித்தன்மையை பாதுகாக்கக்கூடிய வகையிலே ஒரு அளப்பரிய பணியை செய்த ஒரு தலைவரோடு, நமது புரட்சிட்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய படமும் இணைந்து, தோளோட தோள் நின்று உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு துணை நிற்போம் என்ற காட்சியோடு இடம் பெற்றிருப்பது. அவர் வேறு யாரும் இல்லை, தந்தையினுடைய வழியிலே அவருடைய உறுதியாக கொள்கையுடன், இன்று ஜனாதிபதி தேர்தலில் மதச்சார்பற்ற 17 கட்சிகளின் சார்பாக போட்டியிடும் திருமதி மீரா குமார் அவர்களுடைய தந்தை திரு. பாபு ஜெகஜீவன் அவர்களும், நம்முடைய புரட்சித்தலைவர் அவர்களும் இடம் பெறக்கூடிய படம்தான். புரட்சிட்தலைவருடைய வழியிலே தொண்டர்களும் அவருக்கு உறவுக்கு கைகொடுக்க வேண்டுமென்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக தெரிவித்து வாய்ப்பிற்கு நன்றி கூறி அமைகின்றேன்.
இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசினார்.

Add Comment