கடையநல்லூர் நகராட்சி.. என்ன முறையிட்டாலும் செவிடங்காதில் சங்கூதியதுபோல் நகராத ஆட்சி

கடையநல்லூர் நகராட்சி..
என்ன முறையிட்டாலும் செவிடங்காதில் சங்கூதியதுபோல்
நகராத ஆட்சி

13,வது வார்டு . இக்பால் நகர்….. இங்கு ஒன்பது தெருவுக்கு மேலேயுள்ளது , இத்தனை தெருவில் குடியிருப்போருக்கு குடிதண்ணீர் பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் நல்ல தண்ணீர் எட்டிப் பார்க்கும் , அதுவும் அன்று முளுக்க காலையிலிருந்து காலிக்குடங்களுடன்  வேலைசோலிய போட்டுட்டு காத்திருக்க வேண்டும், எப்பவரும் எப்படிவரும் என்று யாருக்கும் தெரியாது வரும்நேரத்தில் தீடீர்ன்னு வரும் கடுஞ்சாயா மாதிரி தேயிலையில்லாமல் தேநீர் போல ..தண்ணீரை பார்த்தா அப்படியொரு நிறம், ……

சரி எப்படியும் நாசமா போவுது….. அதையாவது பில்டர் பண்ணி குடிக்கலாம்னு பார்த்தா வந்த வேகத்துல ஓரிரு குடத்தோடு ஆயுசு குறஞ்சு ஆவியா போயிடும் , அதாவது தண்ணீர் வருவது நின்றுவிடும்… .. இதுவிசயமாக KDNL நகராட்சி பிட்டர் காஜா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் ., ….. கொஞசம் பொருங்க மோட்டார் புகைந்து விட்டது, பைப்பு வெடித்து விட்டது, டெலிவரி அடைத்துவிட்டது என தயாராக வைத்திருந்த டயலாக்கை அவிழ்த்து விடுவார்..

அது என்னமோ தெரியலங்க 13,வது வார்டுக்கு தண்ணீர் விடும் நேரம் பார்த்து பாழாய்ப்போன மோட்டார் புகைதாம், வெடிக்குதாம், அடைக்குதாம் …. மொத்தத்தில் சொல்லப்பனால் இந்த பத்தடி நீர்தொட்டி பத்து தெருவுக்கு பத்தாது என்பதை நாங்க சொன்ன பிறகுதான் பொருப்பான இஞ்ஜினிருக்கே புரியவருது அதன் பிறகுதான் மற்ற குட்டி இன்ஜினியர்களிடம் கேட்டு புருவத்தை உயர்த்துகிறார்..

((மேலும் சில தில்லுமுல்லு வேலைகளும் சிலர் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த இத்துப்போன நீர்தொட்டியில் இருந்து ஏறியாவாரியாக பிரித்து விடும் இரண்டு நாள் தண்ணீரையும் தனக்கும் தனது தெருவுக்கும் நிரந்தரமாக கிடைக்கும் படியாக வால்வை செட்டப்பு செய்திருப்பது தான் வேலியே பயிரை மேய்ந்தது போலுள்ளது.)) இதைத்தான் சமுதாய துரோகமென்றும் சொல்வார்கள் …

இதுவிசயமாக நகராட்சி அதிகாரிடம் விலாவாரியாக போட்டு உடைத்த பிறகுதான் உரைத்தது அதிகாரிக்கு , இதுவிசயமாக எங்களுக்கு தெரியாது என்ற அதிகாரி உடன் ஆவனசெய்கிறோம். அடுத்த விடக்கூடிய தண்ணீர் முறையாக முழுவதுமாக கிடைக்கும் படி செய்வோம் என உறுதியளித்துள்ளார்.. பொருத்திருந்து பார்ப்போம்..

Hyder Ali

Add Comment