கடையநல்லூர் நகராட்சி அதிகாரிகளின் கவனித்திற்கு கொண்டு செல்லுவதற்காக போடபட்ட பதிவு

இது மழை தண்ணீர் அல்ல 15 நாள்களுக்கு ஒரு முறை நம் வீட்டிற்கு வரும் குடிநீர் தான் இது. முழங்கால் அளவு தண்ணீர் வந்து வற்றிய பிறகு எடுத்த படம் இது. மேலகடையநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நகராட்சியின் வசம் இருக்கும் வாட்டர் டேங்கில் இருந்து வலுகாட்டாயாமாக வெளியேற்றபட்ட குடி நீர் .

தண்ணீருக்காக அல்லோல படும் மக்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் ஏன் வலுகட்டாயமாக வெளியேற்ற வேண்டும் காரணம் இங்கே படத்தில் காட்டபட்டுள்ள ஒரு வால்வு. இந்த வால்வு மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீரை வெளியே அனுப்பும் வால்வு இது மாத கணக்கில் பழுது அடைந்து உள்ளது. இதனை முழுமையாக சரி செய்யாமல் அஸ்ஜெட் செய்து கொண்டே ஒப்பேற்றியதால் அது மிகவும் பழுது அடைந்து விட்டது. இதனால் மேலே ஏறுகிற தண்ணீரை நிர்வாகமே வலுகட்டாயமாக வெறோரு வழியில் வெளியேற்றி ரோட்டில் விடுகிறது.

இந்த நிமிடம் வரை அந்த வால்வு சரிசெய்ய படவில்லை. கவனிக்குமா நகராட்சி நிர்வாகம். குடிநீருக்காக திண்டாடும் நாங்கள் அந்த குடி நீர் ரோட்டில் பெருகுவதை பார்த்து சும்மா இருக்க மாட்டோம். அதிகாரிகளின் கவனித்திற்கு கொண்டு செல்லுவதற்காக போட பட்ட முதல் பதிவு இது…..

Add Comment