இலங்கையில் நடப்பதை விட திமுக, காங் நடத்தும் நாடகம்தான் பெரும் கொடுமையாக உள்ளது -பாஜக

இலங்கையில் நடக்கும் கொடுமையை விட இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் நாடகம்தான் மிகக் கொடுமையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜப‌க்சே புதுடெ‌ல்‌லி வந்திருக்கிறார். அவருக்கு இந்திய அரசு ஆடம்பர வர​வேற்பை அளித்துள்ளது. ஏற்கனவே இலங்கை சென்று ராஜ​ப‌க்சேவை சந்தித்து வந்த தமிழக எம்.பி.க்கள்,​​ இப்போது மீண்டும் டெல்லியில் அவரைச் சந்​தித்துள்ளனர்.​ இது வெறும் சம்பிரதாய சந்திப்பாக நடை​பெற்றுள்ளது.

தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இன்னும் 3 மாதங்களில் குடிமயர்த்தப்படுவார்கள் என்று எப்​போதும் சொல்வதையே இப்போதும் ராஜப‌க்சே சொல்லியிருக்கிறார்.​ அதனைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்டதைப் போல தமிழக எம்.பி.க்கள் திரும்பி வந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் கொடுமையை​விட,​​ ஆளும் காங்கிரஸ் கட்சி,​​ தி.மு.க.​ மற்றும் ராஜபக்சே நடத்தும் நாடகம் பெரும் கொடுமையாக உள்ளது.

இந்​தியா -​ இலங்கை இடையே இப்போது 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால்,​​ இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி மேம்போக்​கான,​​ கண்துடைப்பான ஒரு ஒப்பந்தம் தவிர,​​ திட்ட​வட்டமான நடவடிக்கைகள் Buy cheap Levitra எதுவும் இல்லை.

இதிலிருந்தே, ​​ தமிழர்களை ஒழிப்பதில் இந்தியாவும்,​​ இலங்கையும் கூட்டாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிறது.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் ராஜபக்சே தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார்.​ இந்திய நாட்டின் சட்டம்,​​ ஒழுங்கு எவரையும் விட்டு வைக்காது என்பதை புரிய வைக்க வேண்டும்.​ எனவே,​​ டக்ளஸ் தேவானந்தாவை உட​னடியாக கைது செய்ய வேண்டும்.

இலங்கையில் நடக்கும் மறு சீரமைப்புப் பணிகளில் சீனர்களைப் பயன்படுத்தக் கூடாது.​ அந்தப் பணி​களை தமிழர்களுக்கு வழங்க ராஜப‌க்சேவிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Add Comment