கடையநல்லூரில் தலைதூக்கும் குடிநீர் பஞ்சம் கைகொடுக்கும் கருப்பாநதி.

கடையநல்லூரில் தலைதூக்கும் குடிநீர் பஞ்சம் கைகொடுக்கும் கருப்பாநதி.

கடையநல்லூர் : கடையநல்லூரில் தலைதூக்கும் குடிநீர் பஞ்சத்தை போக்க கருப்பாநதி அனையிலிந்து 5 அடி தண்ணீர் திறப்பு
கடையநல்லூரில் குடிநீர் பஞ்சம் தலையெடுத்துள்ளது நிலத்தடி நீர் 800 அடியையும் தாண்டிவிட்டது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்தாண்டும் போதிய மழையுமில்லை கிணறுகளும் குளங்களும் வரண்டு விட்டது நகராட்சி சார்பில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடுவதால் வீட்டின் தேவைக்கு தனியார் தண்ணீர் டேங்கர் மூலம் 4000 லிட்டடர் உப்புத்தண்ணீர் ரூ500 க்கும் குடிப்பபதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 10 லிட்டடர் குடம் ரூ10க்கு வாங்கும் நிலை ஏற்பட்டது இதனால் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் தினசரி சாலை மறியல், நகராட்சி அலுவலகம் முற்றுகை என தொடர் கதையாகி விட்டது இந்நிலையில் கடந்தமாதம் சில நாட்களுக்கு பெய்த மழையினால் கருப்பாநதி அணையில் 37 கனஅடி தண்ணீர் உயந்துள்ளது இதனை தொடந்து கடையநல்லூர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் கிணறுகளுக்கு நீர் பிடிப்பை ஏற்படுத்தும் விதமாக பெரியாற்றுப் படுக்கையில் கருப்பாநதி அணையை திறக்க நகராட்சி நிர்வாகத்தால் கலெக்டர் மற்றும் பொதுப்பணிதுறைக்கு கோரிக்கை வைக்கப்பபட்டது அதன் பேரில் குடிநீருக்காக 5 அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறபட்டு தாமிரபரணி தண்ணீரையும் சேர்த்து நகரில் உள்ள 13971குடிநீர் இனைப்பிற்கு நான்கு நாளைக்கு ஒரு முறை குடிநீர் விடப்படும் என நகராட்சி பொறியாளர் கிருஷ்டோபர் ராஜன் தெரிவித்தார்.

Add Comment