பாலம் சீரமைக்க MLA அவர்களிடம் TNTJ சார்பாக கோரிக்கை!

பாலம் சீரமைக்க MLA அவர்களிடம் TNTJ கிளை சார்பாக கோரிக்கை!

TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 25/7/2017 இன்று காலையில் மாவட்ட நிர்வாகிகளுடன் கிளை நிர்வாகிகளும் சேர்ந்து ரஹ்மானியாபுரம் ஏரியாவிலுள்ள 3வது தெரு பாலம் சீரமைப்பு, மற்றும் முதல்தெரு சாக்கடையுடன் கூடிய பாலம், 5வது மேற்குப்பகுதியிலுள்ள குப்பை கொட்டும்கிணறு, 4வது தெருவிலுள்ள குண்டு குழி அதுபோல் ரஹ்மானியாபுரம் ஏரியாவில் எங்கெல்லாம் சுகாதாரக்கேடு உள்ளதோ அத்துனையிடத்தையும் சீரமைக்க கோரிக்கை மனு சட்டமன்ற உறுப்பினர் சகோ. முஹம்மது அபுபக்கர் அவர்களிடம் வழங்கபட்டது.

இன்னும் ஏற்கெனவே ஆறு தடவைகள் கலக்டர் மற்றும் நகராட்சிக்கு மனு கொடுத்தோம் அவர்கள் சீரமைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி விளக்கம் கொடுக்கப்பட்டது.

இவற்றை எல்லாம் மிகுந்த கவனத்தோடு கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்ஷா அல்லாஹ் 25/7/17 இன்று மாலை MLA அபூபக்கர் அவர்கள் நேரில் பார்வையிட்டு எல்லாத்தெருக்களையும் சரிசெய்து தருகிறேன் என்று உறுதியும் கூறியுள்ளார்.

Add Comment