கடையநல்லூர் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளி இன்றையநிலை

வணக்கம் சொந்தங்களே! நீண்ட நெடுநாளைக்குப் பின் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளி மைதானத்தில் இன்று காலை நடை பயிற்சிக்கு சென்றேன். நூற்றாண்டு விழாவை தொடவிருக்கிற இந்த பள்ளி பல மருத்துவர்களையும் பொறியாளர்களையும், பல விளையாட்டு வீரர்களையும் பல்வேறு துறையில் உயரதிகாரிகளையும் பெற்றுத்தந்த பெருமையுடைய எம் பள்ளி என நினைக்கும்போது மிகுந்த மனமகிழ்ச்சி ஏற்பட்ட தருவாயில், தற்போதைய பள்ளியின் வகுப்பறைகளையும், கழிவறையும், பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டினார்போல் சூழ்ந்த மரம், செடி, கொடிகளையும், மைதானம் முழுவதையும் ஆக்கிரமித்த புதர்களையும், பல்வேறு விளையாட்டு வீரர்களை தந்த விளையாட்டு மைதானம் காணாமல் போனதையும் கண்டபோது இதை யாரிடம் சொல்லி நோவது என மனம் வெம்பி மிகுந்த மனபாரத்துடன் நடை பயிற்சி முடிந்து வெளியேறினேன்…

குறிப்பு : காலை நடை பயிற்சிக்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்பதுடன் நகர இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்கு வேறு மைதானமே இல்லா நிலையிலும் மாலையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் பராமரிப்பே இல்லா நிலையில் இந்த நிலை…!

என்றென்றும் நம் மக்களுக்காக மக்கள் நலனில் அக்கறையுள்ள சராசரி சமூக சேவகனாக இந்த பதிவு…!

நமக்கான உரிமை! அனைத்து உறவுகளும் பகிரவும்..!

yarhrapalani

Add Comment