மக்காத பிளாஸ்டிக்களி்ல் ‘தின்னர்’ தயாரிக்கலாம்!கடையநல்லூர் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

நெல்லை கலெக்டர் பாராட்டு
மக்காத பிளாஸ்டிக்களி்ல் ‘தின்னர்’ தயாரிக்கலாம்!கல்லூரி மாணவர்கள் அசத்தல்

சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத வகையில், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில், உற்பத்தி பொருட்கள் தயாரிக்கலாம் என சோதனை முறையில் நிரூபித்துள்ளனர், கல்லுாரி மாணவர்கள்.கோவை, ஜே.சி.டி., பொறியியல் கல்லுாரியில், பெட்ரோலியம் கெமிக்கல் துறை, இறுதியாண்டு மாணவர்கள் ஹரிபிரசாத் மற்றும் கடையநல்லூர் பைக் மெக்கானிக் அப்துல் ஜப்பார் மகன் பருக்தீன் அலி அஹமது. பாங்காங்க்கில், அமெரிக்–காவை சேர்ந்த, ஐ.ஆர். இ.டி., எனும், பொறியியல், மருத்துவ துறைக்கான ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்தரங்கில், இந்தியா சார்பில், பங்கேற்ற இவர்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து, உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து விளக்கினர். இதற்கு சிறந்த ஆய்வுக்கான சான்றிதழ் கிடைத்திருப்பதோடு, வங்க தேசத்தில், உயர் கல்வி தொடரும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பாக, காப்புரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும், கேரளாவை சார்ந்த ஹரிபிரசாத் மற்றும் பருக்தீன் அலி அஹமது ஆகியோர் கூறியதாவது:பெட்ரோல் கெமிக்கல் துறையில், ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற துடிப்பு இருந்தது.நம் நாட்டில், பிளாஸ்டிக் கழிவுகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதை கடலில் வீசுவதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.மட்காத குப்பை என்பதால், சூழலுக்கும் கேடுவிளைவிக்கிறது. மறுசுழற்சி செய்தாலும், முழுமையாக அகற்ற முடியாத நிலை உள்ளது.
எனவே, இக்குப்பையில் இருந்து, மூலப்பொருட்கள் உருவாக்க திட்டமிட்டோம். பலகட்ட சோதனைகளுக்கு பின், ஆக்சிஜன் இல்லாத குடுவையில், 300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பிளாஸ்டிக் எரிப்பதன் மூலம், அதிலிருந்து ஒருவகை எண்ணெய் பெறலாம். இதோடு, பயோ-டீசல் எனப்படும், ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய், பெட்ரோல் கழிவு ஆகியவற்றை சேர்த்து, வேதிவினைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த கலவையை, 150 டிகிரி வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால், ‘பெயிண்ட் தின்னர்’ கிடைக்கிறது. இந்த பெயிண்ட் தின்னர், கழிவுகளில் இருந்து கிடைப்பதால், சந்தை விலையை விட குறைவாக விற்கலாம். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளையும் முற்றிலுமாக அகற்ற முடியும். இந்த சோதனையை, திருச்சி, அண்ணா பல்கலை, கோவை, காருண்யா பல்கலை, சென்னையில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், நேரடியாக விளக்கினோம். நெல்லை மாவட்டத்தை குப்பையில்லா நகரமாக்க, இம்முயற்சி பெரிதும் உதவும். என்றார்.

Add Comment