கடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கில் பங்கேற்பு.

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே காயிதேமில்லத் திடலே நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் எம் ஐ சுலைமான் நடத்தினார் அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது. இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்றாகீம் நபி அவர்கள் அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக. அதற்க்கு பகரமாக இஸ்லாமியர்கள் ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற பலி பிராணிகளை அறுத்து இறைவனுக்காக பலியிடுகின்றார்கள். . இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுன் கிளைசார்பில் செய்தனர் இந்த தொழுஙையில் கிளை நிர்வாகிகள் ஜப்பார், ,துராப்ஷா, அப்துல்காதர் அய்யூப்கான்மற்றும் பஜார் கிளை தலைவர் குறிச்சி சுலைமான், மதினாநகர் கிளை தலைவர் பாதுஷா, மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் இஸ்ஹாக்கும் ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளி திடலில் மாவட்டபேச்சாளர் அப்துல் காதரும் 8 வது தெரு தவ்ஹீத் திடலில் ஷரீப்பும் , மக்கா நகர் அல் ஹிதாயா திடலில் அப்துல் அப்துல் ஸலாமும், இக்பால் நகர் தெப்பதிடலில் முஜாஹித் ஆகிய இடங்களில்நடை பெற்ற பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் மாரியப்பன் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் , உதவி ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின்ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் பகுதியில் ஆயிரக்கானக்கான ஆடுகளும், மாடுகளும் அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகம் செய்தனர்.

செய்தி படம் குறிச்சி சுலைமான்.

Add Comment