கடையநல்லூரில்…ரோஹிங்கியா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து – TNTJ சார்பில் ஆர்பாட்டம்.

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம்.

கடையநல்லூர் : செப் 14 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக கடையநல்லூரில் மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் மத்திய மோடி அரசு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை திறுப்பி அனுப்பும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .

மியான்மரிலுள்ள ராகின் மஹானத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை ராணுவமும் புத்த மதவாதிகளும் கூட்டுச்சேர்ந்து ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுகிறார்கள். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங் சாங் சுகி என்ற பெண்ணின் தலைமையில் நடைபெறும் அரசில் இன அழிப்பு படுகொலைகள் நடத்தப்படுகின்றன மேலும்
சர்வதேச அகதிக்கான அடையாள அட்டையுடன் இந்தியாவில் 40 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர் ஆனால் இந்திய அரசு முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் பொருளாதாரத்தை காரணம் காட்டி மியான்மருக்கு திருப்பி அனுப்ப போவதாக முடிவு செய்துள்ளதையும் கைவிட
வலியுறுத்தி
நெல்லை மேற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, கடையநல்லூர் பூங்கா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்கினார் மாவட்டச்செயலாளர் முகம்மது தாஹா,மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாவட்ட துனைத் தலைவர் சதீஷ் புகாரி மாவட்ட துனைச்செயலாளர்கள் அஹ்மத், பாசித், மீரான்கனி, அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தனிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்
இதில் மியான்மார் அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரும்திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு மியிமர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் அனைத்துகிளை நிர்வாகிகள் குறிச்சி சுலைமான், அப்துல் ஜப்பார், பாதுஷா, அமீன், சிராஜ், அப்துல்லாஹ் ஆகியோர் செய்தனர் அய்யூப்கான் நன்றிகூறினார்.

Add Comment