கடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்

கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற
பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்
கடையநல்லூர் மனோன் மணியன் சுந்தரனார் பல்கலைகழக அரசு உறுப்பு கல்லுரின் பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குறிச்சி சுலைமான் , கழக செயலாளர் வணிகவியல் துறை லெட்சுமணன், கழக பொருளாளர் உடற்கல்வி குருச்சந்திர பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இக்கூட்டத்தில் பெற்றோர்-ஆசிரியர் கழக செயர்குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ஆங்கிலத்துறை நெல்சன், தமிழ்துறை கிருத்திகா, மேலாண்மை துறைஅனுராதா, கணிததுறை தனலெட்சுமி மற்றும் பொற்றோர்கள் சின்னதம்பி , திவான்மைதீன், முப்பிடாதி ஆகியோர் கலந்து கொன்டனர் இறுதியில் கழக துணைத்தலைவர் கணினி அறிவியல்துறை அருள்மேரி நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

(1)வருகின்ற 12ம் தேதி புதியதாக திறக்கப்பட உள்ள அரசு புதிய கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான கட்டில், சேர், மேஜை டேபில் போன்ற பர்னிச்சேர் வசதிகளை ஏற்பாடு செய்வது.

(2)புதியதாக திறக்கப்பட உள்ள அரசுக்கல்லூரி அருகே பன்பொழி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய மாவட்ட. ஆட்சியரை வலியுறுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டது .

Add Comment