கலிமா விளக்கால்…….

இதோ ! புறப்பட்டு விட்டேன் !
உன்னைத் தேடி
உள் நோக்கிய பயணம் !
என்னைத் தேடி
முதலில்
கண்டுபிடிக்க வேண்டும் !
உள்நோக்கிய பயணத்தில்
ஒரே இருட்டு !
பாவப் பாசியில்
கால்கள் வழுக்குகின்றன !
தட்டித் தடுமாறி
எழுந்து நடக்க
எத்தனிக்கின்றேன் !
கையில் கலிமா
விளக்கிருகின்றது !
“நான்” எங்கிருக்கின்றேன் ?
அகந்தைச் buy Cialis online சந்தையில்
ஆசைகளை வாங்கி
செருக்குச் சகதியில்
சிக்கித் தவித்து
“நான்” அங்கே
தடுக்கி விழ….
இதோ-
என் பயணம்
தொடர்கிறது !
ஏகத்துவ ஒட்டடைக்
கோல்கொண்டு என்னுள்
படிந்த தூசிகளை
பரமனே ! துடைத்து
கலிமா விளக்கால்
கரை சேர்த்து அருள்வாய் !

Add Comment