தமிழகத்தில் கூடுதலாக 12000 பொறியியல் மாணவர் இடங்கள் சேரும்

தமிழகத்தில் மேலும் 50 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அப்படி கிடைத்தால் கூடுதலாக 12,000 மாணவர் இடங்கள் சேரும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 452 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் Buy Levitra கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த நிலையில் புதிதாக 50 பொறியியல் கல்லூரிகள் தொடங்க அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் தகுதி உடையவர்களைப் பரிசீலிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மன்னர் ஜவகர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழு செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிவரை அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்தது.

பரிசீலனையின் போது சில கல்லூரிகளில் தேவையான வசதிகள் செய்யப்படாதது தெரிய வந்தது. அந்த வசதிகளை சரி செய்து பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் விரைவில் விண்ணப்பிக்குமாறு அந்த கல்லூரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

வருகிற 28-ந்தேதி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்குள் அனைத்து கல்லூரிகளின் விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும்.

50 கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்தால் கூடுதலாக 12,000 மாணவர் இடங்கள் உருவாக்கப்பட்டு, மொத்த மாணவர் இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரமாக உயரும்.

Add Comment