ஆனந்த விகடன் கருத்து கணிப்பு முடிவுகள்

அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி-ஆனந்த விகடன் கருத்து கணிப்பு முடிவுகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சுமார் 2081 வாக்காளர்களிடம் ஆனந்தவிகடன் தனது மாணவ பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது…இன்றைய ஆனந்த விகடனில் அதன் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது…..


அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள்;

ஜெயலலிதாவின் ஆணவ போக்கால் வெற்றியின் சதவீதம் குறைந்திருக்கிறது..ஆனால் தோல்வி அடையும் அளவு இல்லை.

ஜெயலலிதா கூட்டணிகட்சியினரிடம் நடந்து கொண்ட விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது…

தலை நகரை விட்டு தலை தப்பிச்சா போதும் னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுகிறார்…அவருக்கே எலெக்சன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு அதை பயன்படுத்திக்காம வெற்றி பெறுவோம் என்கிற மமதையில ஜெயலலிதா தப்பான முடிவுகளை எடுத்திட்டார்..அவரை பார்த்து இப்போ பரிதாபப்படக்கூட முடியலை என்றாராம் ஸ்ரீரங்கத்துகாரர்….

ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த தேர்தலில் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தும்…ஸ்பெக்ட்ரம் விவாகாரத்தை நினைத்து சுமார் 46 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்றார்களாம்…

உசிலம்பட்டியில்,அந்தம்மா வந்தா சட்டம் ஒழுங்கு சரியா இருக்கும்,அதிகாரிங்க பயப்படுவாங்க…நிர்வாகம் சரியாக இருக்கும் அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்..கலைஞர் வந்தா மிக்ஸி கிரைண்டர் கிடைக்கும் அவருக்கு தான் ஓட்டு போடுவோம் என்றார்களாம்

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு கலைஞரை விட ஜெயலலிதாவே அதிக மதிப்பெண் பெறுகிறார்….சர்வே ரிசல்ட்

ஐந்து ஆண்டு கால தி.மு.க அர்சின் இலவச திட்டங்கள்..சாதனைகள்..?

1.எல்லாமே மக்கள் வரிப்பணம்தானே..?-47.09 சதவீதம் மக்கள்
2.பயனுள்ள திட்டங்கள்-27 சதவீதம் மக்கள்


அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்திருப்பது..?

கூட்டணிக்கு பலம்..-70.78 சதவீதம் மக்கள்

எந்த மாற்றமும் நடக்காது -20 சதவீதம் மக்கள்


யார் நல்லாட்சி தருவார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

கருணாநிதி-28.54 சதவீதம் மக்கள்

ஜெயலலிதா-33.25 சதவீதம்

இருவருமே இல்லை-38.25

யாருக்கு வாக்களிப்பீர்கள்..?

தி.மு.க கூட்டணி-34.60 சதவீதம் மக்கள்

அ.தி.மு.க கூட்டணி-44.26 சதவீதம் மக்கள்.

.வைகோ அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது..பலர்,இது வைகோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றே கருத்து Viagra online தெரிவித்துள்ளனர்..

Add Comment