முதுகில் குத்திய பாமக, காலைவாரிய தேமுதிக மற்றும் பிறர்

முதுகில் குத்திய பாமக, காலைவாரிய தேமுதிக மற்றும் பிறர்
கடந்த 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்கள் குறித்த விபரங்களையும், தற்போது பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களின் விபரங்களையும் தொகுத்துள்ளேன். அதிலிருந்து கீழ்கண்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

1) பாமக தவிர மற்ற பெருங்கட்சிகள் முஸ்லிம்களுக்கு ஓரிரு தொகுதிகள் ஒதுக்கியுள்ளன. முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் அச்சுருத்தலாக இருக்கும் பாஜககூட ஒரு தொகுதி* ஒதுக்கியுள்ள நிலையில் முஸ்லிம்களாகிய பழனிபாபா, குணங்குடி ஹனீபா ஆகியோரால் வார்த்தெடுக்கப்பட்ட பாமக முஸ்லிம்களுக்கு ஒருதொகுதிகூட ஒதுக்காததன்மூலம் தன்னை தெளிவாக அடையாளம் காட்டிவிட்டது.

2) அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தோல்விக்கு தேமுதிக வேட்பாளர்கள் ஓட்டுக்களைப் பிரித்ததே காரணம் என்று பரவலாகச் சொல்லப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் எளிதில் வெறிபெறக்கூடிய Bactrim online தொகுதிகளே என்பதும் தெரிய வருகிறது.

3) ராமநாதபுரத்தில் காங்கிரஸின் சார்பில் சகோ.ஹசன் அலி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். ஏற்கனவே அத்தொகுதியில் சகோ. ஜவாஹிருல்லா அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். அதற்கு முன்பே SDPI சார்பிலும் வேட்பாளர் போட்டியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதன்மூலம் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் ஒரே இடத்தில் மோது பட்சத்தில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடும். பேரா.ஜவாஹிருல்லாஹ் வெற்றியடையும் பட்சத்தில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட இரு முஸ்லிம்களில் ஒருவருக்கு வெற்றிவாய்ப்பு பறிபோகும்.

4) அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு சுமார் 8.9% சதவீத வாக்குகளை அறுவடை செய்த தேமுதிகவுக்கு முஸ்லிம் வேட்பாளர்கள் கணிசமாக உதவி செய்துள்ளனர். அதைக்காரணமாக வைத்தே, இத்தேர்தலில் அதிமுக அணியில் 41 இடங்கள் கிடைத்துள்ளன.எனினும் ஒரேயொரு தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளரை அறிவித்திருப்பதன்மூலன் தேமுதிகவும் இன்னொரு பா.ம.கவாக உருவெடுக்கிறதோ என்றே கருத வேண்டியுள்ளது.

இணைப்பிலுள்ள பட்டியலுடன் மேலும்தகவல்கள் கிடைப்பின் சகோதரர்கள் அறியத்தரின் இதனமூலம் முஸ்லிம்களின் வாய்ப்புகளையும், கட்சிகளின் அணுகுமுறைகளையும் அறிந்து அதற்கேற்ப முஸ்லிம்கள் முடிவெடுக்க உதவியாக இருக்கும். அதேபோல், குறைகள் இருப்பின் சகோதரர்கள் அறிய தரவும்.

Add Comment