அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள்?

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்காந்துக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேர்தலை திமுக முன்கூட்டியே நடத்தக்கூடும் என்று அதிமுக கருதுகிறது.

இந் நிலையில் இப்போதே கூட்டணி பேரங்கள் ஆரம்பித்துவிட்டன. ஏற்கெனவே திமுக-பாமக கூட்டணிப் பேச்சுக்கள் பகிரங்கமாகவே நடந்து வருகின்றன.

இந் நிலையில், அதிமுக மற்றும் விஜய்காந்தின் தேமுதிக இடையே கூட்டணி குறித்து சில தினங்களாக ரகசிய பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

தேமுதிக தரப்பில் 90 சீட்டுகளும், தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவியும் தரப்பட வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அதிமுக தரப்பில் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

இதைத் தொடர்ந்து மேலும் இரு முறை சந்தித்துப் பேசிய பிறகு, தேமுதிக 60 தொகுதிகளுக்கு பேரத்தை முடித்துக் கொள்ள விரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதை அதிமுக தலைமையும் ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.

வைகோ கதி?:

தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் உறுதியானால் வைகோவி்ன் மதிமுக Buy Amoxil Online No Prescription நிலைமைதான் பெரும் சிக்கலுக்கு உள்ளாகும். அவருக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும், இதனால் வழக்கம் போல இந்த முறையும் தேர்தல் நேரத்தில் அவர் அல்லாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார் வைகோ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Add Comment