ஜெயலலிதா 3ம் தேதி கடையநல்லூர் வருகை

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி தென்காசி வரு Buy Viagra கிறார். 6 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஜெயலலிதாவை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலை அடுத்து அரசியல் தேர்தல் களம் நாளுக்கு நாள் கோடை வெப்பத்தை காட்டிலும் சூடுபிடித்து வருகிறது அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்திற்காக தென்மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது முதல் சுற்றுப்பயண தகவலின்படி நெல்லைக்கு மட்டுமே வருகை தருவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் வேண்டுகோளை அடுத்து தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 3ம் தேதி தென்காசிக்கு தேர்தல் பிரசாரத்திற்காக ஜெயலலிதா வருகிறார். அதற்காக ஆசாத்நகரில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் தொகுதி வேட்பாளருமான செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி தென்காசி காந்தி சிலை அருகில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மதியம் 12 மணிக்கு தேர்தல் பிரசார மேடையில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
தென்காசிக்கு வரும் கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்க புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Add Comment