ஸ்டாலின் 30;நெப்போலியன் 7

நெல்லை Ampicillin online மாவட்டத்தில் வரும் 30ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி மத்திய அமைச்சர் நெப்போலியன் ஆகியோர் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்திற்கு வரும் 30ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஸ்டாலின் வருகிறார். தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். தொடர்ந்து தச்சநல்லூர் வழியாக நெல்லை டவுனுக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.
பின்னர் நெல்லையப்பர் ஹைரோடு வழியாக பாளைக்கு செல்லும் அவர் ஜவகர் மைதானம், மேலப்பாளையத்தில் பிரசாரம் செய்கிறார். பிறகு சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை ஆகிய பகுதிகளிலும், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், கடையம், தென்காசி, இடைகால், கடையநல்லூர் நகரம், சொக்கம்பட்டி பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் இரவில் புளியங்குடி, முள்ளிக்குளம் வழியாக சென்று சங்கரன்கோவில் பகுதிகளில் திமுக மற்றும் காங்.,கூட்டணி வேட்பாளர்களுக்கு துணை முதல்வர் ஆதரவு திரட்டுகிறார். அன்று இரவில் ராஜபாளையத்தில் அவர் தங்குகிறார்.
நெப்போலியன் வருகை: >மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் வரும் 7ம் தேதி நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4 மணி முதல் கல்லிடைக்குறிச்சி, அம்பை, இடைகால், ஆலங்குளம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, சேர்ந்தமரம், வீரசிகாமணி, சங்கரன்கோவில் பகுதிகளில் மத்திய அமைச்சர் நெப்போலியன் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Add Comment