நெல்லை பல்கலை.,நேர்முக வகுப்பு இன்று ஆரம்பம்இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நேர்முக பயிற்சி வகுப்புகள் பாளையில் இன்று (26ம் தேதி) ஆரம்பமாகிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நெல்லை கல்வி மை யுவராஜ் அகடாமி மூலம் சேர்ந்து பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாளை சேவியர் மேல்நிலைப் பள்ளியில் இன்றும் (26ம் தேதி), நாளையும் காலை 10 Buy cheap Lasix மணி முதல் மாலை 5 மணி வரை நேர்முக பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.முதலாம் ஆண்டு 2010-11 சேர்ந்த இளங்கலை பி.ஏ, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி, பி.சி.ஏ, முதுகலை எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்சி, எம்.பி.ஏ மேலாண்மை உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் இதில் பங்கேற்கின்றனர். இதுசம்பந்தமாக அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே அழைப்பு கடிதம் அனுப்பபட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் உரிய அடையாள அட்டையுடன் மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நெல்லை கல்வி மையத்தில் இந்த காலண்டர் ஆண்டிற்கான அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.ஏற்கனவே பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.சி.ஏ பட்டம் பெற்றவர்கள் மற்றொரு இளநிலை பட்டப் படிப்பை ஒரு ஆண்டில் பயிலலாம். ஏற்கனவே எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ பட்டம் பெற்றவர்கள் மற்றொரு எம்.ஏ முதுநிலை பட்டப் படிப்பை பயிலலாம். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் இக்கல்வி மையத்தில் சேர்ந்து அடுத்த ஆண்டிற்கான படிப்பை தொடரலாம்.

எம்.பி.ஏ (புரொபெஷனல்) ஒரு ஆண்டில் படித்து மேலாண்மை பட்டம் பெறலாம். இதற்கு தகுதி பட்டப் படிப்புடன் தனியார் அல்லது அரசு பணியில் இருக்க வேண்டும். பட்டப் படிப்பில் பி.சி.ஏ அல்லது பி.ஜி.டி.சி.ஏ படித்திருந்தால் எம்.சி.ஏ 2ம் ஆண்டு நேரடியாக சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் எம்.சி.ஏ பட்டம் பெறலாம். ஏதாவது ஒரு டிப்ளமோ படித்தவர்கள் பி.சி.ஏ 2ம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து 2 ஆண்டுகள் பி.சி.ஏ பட்டம் பெறலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி தொகைம் வழங்கப்படுகிறது என்று பல்கலைக் கழக நெல்லை கல்வி மைய ஒருஙகிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

Add Comment