ரீமேக் படங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய்

விஜய் சமீப காலமாக ரீமேக் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது காவல்காரன் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய்யின் அடுத்த படம் வேலாயுதம். இந்த படத்தை ஏராளமான எதிர்பார்ப்புகள் நிறைந்த படமாக ஜெயம் ராஜா இயக்க உள்ளார். தெலுங்கில் நாகர்ஜூனா, செளந்தர்யா நடித்து சூப்பர் ஹிட்டான அசத் படம் தான் தற்போது தமிழில் வேலாயுதம் என்ற Levitra No Prescription பெயரில் ரீமேக் ஆக உள்ளது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமான அசத் படத்தின் திரைக்கதையை ஜெயம் ராஜா தனக்கே உரிய ஸ்டைலில் மாற்றி அமைத்து வருகிறார். வேலாயுதம் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் காவல்காரன் படமும் மலையாள படமான பாடிகாட்டின் ரீமேக் தானாம்.

Add Comment