ஒரு தொகுதி வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வேறு தொகுதியில் ஓட்டு போடலாம்! தேர்தல் ஆணையம் உத்தரவு

வாக்காளர்கள் வேறு ஒரு தொகுதியின் வாக்காளர் அடையாள அட்டையை Lasix online காட்டினாலும், அதை ஏற்றுக்கொண்டு அவரை ஓட்டு போட அனுமதிக்க வேண்டும்’ என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இதில் விடுபட்டு போனவர்கள், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போட அனுமதிக்கப்படுவர். இதற்கான உத்தரவு ஏற்கனவே அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாள அட்டை குறித்து மேலும் ஒரு விளக்கத்தை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதில், “ஒரு சில வாக்காளர்கள், தேர்தலின் போது தொகுதியை விட்டு இடம் பெயர்ந்திருக்கலாம். அவர்கள் முந்தைய தொகுதியில் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பர். அவர்கள், மாற்று தொகுதியில் ஓட்டளிக்கும் போது முந்தைய புகைப்பட அடையாள அட்டையை காட்டினால், அதை ஒப்புக் கொண்டு, ஓட்டு போட அனுமதிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது

Add Comment