வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்த விஜயகாந்த்

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதரித்து பேச வந்த தன் கட்சி வேட்பாளரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்து, உதைத்த நடிகர் விஜயகாந்தின் செயல் மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் பாஸ்கருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். பிரச்சார வேளையில் கூட்டத்தில் கொடி பிடித்து நின்றிருந்த விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினரைக் கொடியினை இறக்குமாறு கூறி கத்தினார்.

தொடர்ந்து தன் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பேசிக் கொண்டிருந்த விஜயகாந்த், வேட்பாளரின் பெயரைப் பாஸ்கருக்குப் பதிலாக பாண்டியன் என குறிப்பிட்டார். தன் பெயரைத் தலைவர் மாற்றி கூறுவதைக் கேட்ட வேட்பாளர் பாஸ்கர், அதனை விஜயகாந்துக்கு நினைவுபடுத்து முகமாகவும் பொது மக்களைப் பார்த்து அறிமுகமாகும் முகமாகவும் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த வேனின் மேல் பகுதிக்கு வர முயன்றார்.

ஆனால், அவரை மேலே வரவிடாமல் ஆத்திரத்துடன் நாகரீகமின்றி அவரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்தார். இக்காட்சியினை மக்கள் தொலைக்காட்சி தெளிவாகப் படம் பிடித்து ஒளிபரப்பியது.

தன் buy Doxycycline online கட்சி வேட்பாளரையே எவ்வித நிதானமும் நாகரீகமுமின்றி தேர்தல் பிரச்சார வேளையில் விஜயகாந்த் சரமாரியாக அடித்து உதைத்த காட்சியினைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வீடியோ காட்சி

http://www.youtube.com/watch?v=F9NB_ulc60A

Add Comment