இறை”வா” !

இறைவா !
உன்னை
அறிவதற்கும் அடைவதற்கும்
வாசல் கதவுகளைத்
திறந்துவைத் திருக்கின்றாய் !
நாங்களோ
மதில்களில் மோதி
மண்டை பிளக்கின்றோம் !
பூக்களும் உன் வாசல் !
எங்களைத்
தேடிவருகின்ற தென்றலும்
உன் வாசல் !
புயலும் உன் வாசல்!
பூமியில் பச்சை
வயலும் உன் வாசல் !
நீ
சுவாசக் காற்றிலும்
சூல்கொண் டிருகின்றாய் !
உன்னைத்
தேடி அலைவதாய்ச்
சொல்லிக் கொண்டு
தெருத் தெருவாய்
அலைகின்றோம் !
முள்ளிலும் கூட
உன் வாசல்
மூடாமலே இருக்கிறது !
மழைத் துளியில்
பனிப் பொழிவில்
பாலைப் பெருவெளியில்
பர்வதக் கூட்டங்களில்
பரந்து நீ அங்கங்கே
பக்குவமாய் இருக்கின்றாய் !
எங்கள்
புறக் கண்களுக்கு
புலப்பட வில்லை; ஆனால்
உன்னை உனக்காக
ஒரு இலாபம் கருதாமல்
வணங்கித் துதி செய்தால்
வந்தெங்கள் இதயத்து
அர்ஷில் Buy Bactrim அமர்ந்து
ஆட்சி செய்ய மாட்டாயா ?

Add Comment