மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆசிரியை மீது தாக்குதல்

நாகர்கோவில் & நெல்லை: சுசீ்ந்திரம் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியை தாக்கப்பட்டார்.

நாகர்கோவிலையடுத்த பள்ளம் பகுதியி்ல் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அல்போன்சம்மாள். இவர் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

பொட்டல்விளை பகுதியில் உள்ள வீடுகளில் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகிறார். நேற்று மாலையில் வீடுகளில் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து கொண்டிருந்தார்.

அந்தப் பகுதியை சேர்ந்த வேலப்பன் என்பவரின் வீட்டுக்கு கணக்கெடுப்புக்கு சென்றார். வீட்டில் வேலப்பன் உள்ளிட்டவர்கள் இருந்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் விபரங்களை கேட்டறிந்தவர், பின்னர் கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் வீட்டில் உள்ள பொருட்களின் விபரங்களை கேட்டார்.

திடீரென ஆத்திரம் அடைந்த வேலப்பன் இவ்வளவு கேள்விகளா கேட்பீர்கள் என கூறி தரையில் அமர்ந்திருந்த அல்போன்சம்மாளை காலால் மீதித்து கீழே தள்ளினார். இதில் அவருக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த ஆவணங்களும் சிதறின.
பயந்து ஓடிய அவரை வேலப்பன் கல்லை எறிந்து தாக்கினார்.

இதையடுத்து அப் பகுதி பொதுமக்கள் திரண்டு அல்போன்சம்மாளை காப்பாற்றினர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் அவர் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வேலப்பனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அவரை கைது செய்தனர்.

மாணவி மீது கல்வீசி தாக்குதல்:

இதற்கிடையே பாளையங்கோட்டையில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவி மீது மனநிலை பாதிக்கப்பட்டவர் கல்வீசி தாக்கினார்.

பாளையில் பிளஸ் டூ படித்து வருபவர் சித்ராதேவி. இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே, நின்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் சித்ரா தேவி கற்களை வீசினார்.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

போலீசார் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபரை பிடித்து காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்

நெல்லை மாநகரில் இதுபோல் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வருகின்றனர். சிலர் கையில் கம்பு மற்றும் கம்பிகளை வைத்து கொண்டு வருவது பொது மக்களை பீதயடைய வைத்து வருகிறது.

சென்னை மாநகரில் சுற்றி திரியும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து காப்பகங்களில் ஒப்படைக்கின்றனர். அதேபோல் நெல்லையிலும் இவர்களை காப்பகங்களில் ஒப்படைக்க அரசு நடவடிக்கை Buy Bactrim Online No Prescription எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோருகின்றனர்.

Add Comment