இபுலீசு பேசுகிறான் !

தோழனே ! வா !
உன்
தோல்விகள் தானே
எனக்கு வெற்றிப் படிக்கட்டுக்கள் ?
கல்லெறிந்து என்னைக்
கழற்றி விட்டதாய்க்
கனவு காண்பவனே !
உன்
உள்ளத்து மூலையில்
உட்கார்ந்து உன்மீது
கல்லெறிந்து உன்செயலைக்
காயப் படுத்துவது
நானல்லவா நண்பனே !

நீ
எந்தக் கல்லெறிந்து
என்னை விரட்டுவாய் ?

பொய் பொறாமை
புறங்கூறும் புத்தி
வட்டி விபச்சாரம்
வாரி வழங்காத
கருமித்தனமென்று
கல்லெறிந்து உன்னைக்
காயப் buy Viagra online படுத்தினாலும்
பூவென்று தானே நீ
புளகாங்கிதம் அடைகின்றாய் ?
வீரமாய்க் கல்லெறிந்து
விரட்டுபவனா நீ ?
சகோதர மாமிசம் சாப்பிடும் நீ
என் சகோதரன் அல்லவா ?

நான்
தெரு விளக்கை உன்னிடம
திணித்து விட்டு
இரு விளக்கை உன்னிடம்
எடுத்துக்கொண்டேன் !
அதனால் தான் நீ
மாற்றான் தோட்டத்தில்
மல்லிகையாய் ஆகாமல்
அரளிப் பூவாக
ஆகிப் போனாய் !
கள்ளிப்பூ மனக்குமென்று
கதைபேச வைத்துன்னை
புள்ளிக்கும் உதவாத
புள்ளியாய் ஆக்கிவிட்டேன் !

நபிகளை, அவாதம் வழிகளைப்
பின்பற்றி யுயர்ந்த
பிரிய நற்ரோழர்களை
நீ பழித்தும் இழித்தும்
பேசுவதெல்லாம்
என் வழியல்லவா ?
எப்படி அது நபி வழியாகும் ?
என் வழி நடக்கின்ற
இனிய என் தோழனே !
உன்னைப்
போராளியாகப் புறப்பட்டு
வரச்செய்து
தீவிரவாதியாக
தெருவில் நிற்க வைத்தேன் !
நீயா என்னைக்
கல்லெறிந்து விரட்டுகிறாய் ?
உன் பெயரை எல்லோரும்
உச்சரிக்க வேண்டுமென்று
தனித்தனியாய்க் கொடிகளை
தலைக்குமேல் பிடிக்கின்றாய் !
ஒற்றுமையின் கயிற்றை
உதறித்தள்ளிவிட்டு
வேற்ருமையோடு தானே
வெளியில் வருகின்றாய் !

முஸ்லிம் பெயர்களால்
முக்காடு போட்டுக்கொண்டு
என்வழி நடக்கின்ற
இஸ்லாத்தின் எதிரிகளே !
என் வாய் மொழிகள்-
நரகத்தில் வேர்விட்டு
நாவுகளில் கிளை பரப்பும் !
பரமனுக்கு உங்களை
பரம எதிரிகளாய்
ஆக்குகின்றவரை
அடியேன் ஓயமாட்டேன் !

நண்பனே !
நரக நெருப்பு
நன்றாக எரிவதற்கு
விறகு கொடுக்கின்ற
வியாபாரி நான்தான் !
கொள்முதல் செய்வதற்கு
கும்பிட்டு வருகின்றேன் !
தோழனே ! நீயிருக்க
தோல்வியா வந்துவிடும் ?

இறைவனுக்கு உருவம்
இருக்குதென்று நான்கூட
எப்போதும் சொன்னதில்லை !
இனிய என் தோழனே !
உருவம் தொழுகின்ற
ஒருவரும் சொன்னதில்லை !
என்னையும் விஞ்சிவிட்டாய் !
நீதான் இனி எனக்குக்
கொள்கை பரப்புச்
செயலாளர் !
ஞானிகளும் சூபிகளும்
ஒளியாய்க் கண்டவனை
உருவமாய்க் காண
உபதேசம் செய்பவனே !
நீ
ஆலிமாய் வேடம்பூண்டு
அழகாய்த்தான் நடிக்கின்றாய் !
இபுலீசு விருதுனக்கு
எப்படியும் கிடைத்துவிடும் !
வா ! வா!
நரகத்தில் நானுக்காய்
நன்றியுடன் காத்திருப்பேன் !

Add Comment