துனீஷியா- ஒரு வரலாற்றுப்பார்வை

துனீஷியா- ஒரு வரலாற்றுப்பார்வை துனீசியாவின் பழைய பெயர் “ஆஃப்ரீக்கிய்யா” ஆகும். ஹிஜ்ரி 27ஆம் ஆண்டில் ம்முன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) யின் காலத்தில் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் (சின்னம்மா மகன்) அப்துல்லாஹ் இப்னு சஅத் பின் அபீஸரஹ்(ரலி) வின் தலைமையின் கீழ் போர் புரிந்த இஸ்லாமியப்படை லிபியாவின் நகரம் தராபுலஸ்( திரிபோலி) யின் வெற்றியை தொடர்ந்து இந்த நாட்டை வெற்றி கொண்டனர். ஆஃப்ரீக்கியாவை வெற்றி கொண்ட இந்த போர் “அபாதிலா போர்” என சிறப்புப்பெயராலும் அழைக்கப்படுகிரது.. (அபாதிலாஹ் என்றால் அப்துல்லாஹ்கள் என்று பொருள்) இந்தபோரில் அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்ட ஏழு ஸஹாபாக்கள் (நபி தோழர்கள்) பங்கு பெற்றனர். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அப்துல்லாஹ் இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீஸராஹ், அப்துல்லாஹ் இப்னு ஜாஃபர் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் . துனீசியாவில் முஸ்லிம்கள் “ஃகைர்வான்”என்ற ஒரு புதிய நகரை நிர்மாணித்தனர். இந்த நகரை முஸ்லிம் படைத்தளபதி உஃக்பாஇப்னு நாஃபிஇ ஃபஹ்ரி (ரலி) நீண்ட ஆலோசனைக்குப்பின் நிர்மாணித்தார். உஃக்பாஇப்னு நாஃபிஇ ஃபஹ்ரி (ரலி) துனீசியாவை வெற்றிகொண்டபின் பேரறிஞர்கள், சிந்தனையாளர்களை கூட்டினார். பின்னர் ஆஃரீகியா மக்களைப் பற்றி குறிப்பிட்டார். இந்த மக்களிடம் எந்தவிதமான ஆன்மீக உணர்வுகளோ, மார்க்கரீதியான நம்பிக்கைகளோ இல்லை. தவிர இவர்களிடம் ஒழுக்க மாண்புகளும் பண்பாடுகளும் இல்லை. எதுவரை வாளின் நிழல் இந்த மக்களின் தலைமீது இருக்கிரதோ அதுவரை இவர்கள் சரியாக இருப்பார்கள். இவர்கள் மீதிருந்து கவனம் தப்பிவிட்டால் இவர்கள் மீண்டும் தமது அறியாமக்கால தீய நடத்தைகளில் மூழ்கிவிடுவார்கள். ஆதலால் முஸ்லிம்கள் இவர்களோடு ஒன்றாக இருப்பது சரியல்ல. ஆனால் இவர்களை இப்படியே விட்டுவிடுவதும் சரியல்ல. எப்போது இவர்கள் வழிகேட்டின்பால் செல்ல யத்தனிக்கின்றார்களோ அப்போது இவர்களை நெம்பி நிமிர்த்த நாம் அருகிலேயே இருக்கவேண்டும் அதற்க்காக ஆஃப்ரீகியா வுக்கு அருகிலேயே ஒரு நகரை உருவாக்கவேண்டும் என தமது திட்டத்தை விவரித்தார். கூடியிருந்த மாபெரும் சிந்தனையாளர்கள் இந்த திட்டத்தை ஆமோதித்தனர். துனீசியாவின் மத்தியில் ஃகைர்வான்” என்ற இந்த நகரம் அமைக்கப்படுகிறது. நகரின் மத்தியில் மஸ்ஜிதே உஃக்பா பின் நாஃபிஃ யும் (ரலி) ஹிஜ்ரீ 50ஆம் ஆண்டு(கி.பி.670) ல் நிர்மாணிக்கப்படுகிறது. இதற்க்கிடையே தூனீசியர்கள் கூட்டம்கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தும் விடுகிண்றனர். துனிசியாவில் ஹிஜ்ரீ 183( கி.பி799) ல் கலீஃபா ஹாரூன் ரஷீதின் காலத்தில் இப்ராஹீம் பின் அக்ஹ்லப் என்பவர் “அஃக்ஹ்லபி வம்ச ஆட்சியை நிறுவினார். இங்கிருந்துதான் கி.பி877ஆம் ஆண்டில் இமாம் மாலிக்(ரஹ்) ன் மாணவர் காஜி அஸத் பின் ஃபுராத் என்ற கடற்படை தளபதி இத்தாலியின் சிசிலி மீது தாக்குதல் நடத்தி அதை வசப்படுத்தினார். ஹிஜ்ரீ 298(கி.பி 909)ல் உபைதுல்லாஹ் அல் மஹ்தி அஃக்லபி வம்ச ஆட்சியை அக்ற்றி உபைதி(ஃபாதிமி) வம்ச ஆட்சியை நிறுவினார். பின்னர் இது எகிப்து, ஹிஜாஸ்(அரேபியா), பாலஸ்தீனம் வரை பரவியது. உபைதியாக்களின் முதல் தலைநகரமாக ” மஹ்திய்யா”(தூனீஸ்) இருந்தது. ஹிஜ்ரி ஏழாம் நூற்றண்டின் மத்தியில் சிலுவை மன்னன் ஒன்பதாம் லூயி தூனீசியாவை கைப்பற்றிக்கொண்டான். ஆனால் கொள்ளை நோயின் காரணமாக ஒன்பதாம் லூயியின் மரணம் நிகழ்ந்ததால் சிலுவையாளர்களின் எண்ணம் நிறைவேறாமலேயே போனது. ஹிஜ்ரி பத்தாம் நூற்றண்டில் ஸ்பெயினின் மன்னன் அய்ந்தாம் சார்லஸ் தூனிசியாவை கைப்பற்ற எண்ணி ரத்தக்களரி உண்டாக்கியபோது உதுமானிய கிலாஃபத்தின் கடற்படை தளபதி ஃகைருத்தீன்பார்பரோஸா ஹிஜ்ரீ944 (கிபி. 1537) அவனை முறியடித்தார். இவ்வாறாக துனீசியா உதுமானிய கிலாஃபத்தின் ஒரு பகுதியாக மாறியது. பின்னர் buy Levitra online ஹிஜ்ரி1076 (கிபி.1665)ல் ப்ரான்ஸ் நாட்டின் கடற்படை துனீசியாவின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால் சிலுவையாட்சியினர் அதை கைப்பற்ற முடியவில்லை. இறுதியக ஹிஜ்ரி 1299 ( கிபி. 1882) ஆண்டில் பிரான்ஸ் நவீன யுத்தத்தளவாடங்களுடன் மீண்டும் தாக்குதல் நடத்தி துனீசியாவை கைப்பற்றிகொண்டது. சுமார் முக்கால் நூற்றாண்டு காலம் துனீசியாவில் பிரான்ஸின் ஏகாதிப்த்தியத்தில் இருந்தது. இந்த காலகட்டத்தில் தான் மொராக்கோ,அல்ஜீரியாவைப்போல் ஃப்ரெஞ்சு மொழி ஆட்சி மொழியாகியது கூடவே அய்ரோப்பிய கலாச்சாரம், பண்பாடு,நாகரீகம் வேர் பிடித்து பரவியது. பிரான்ஸின் பிடியிலிருந்து (1956CE) சுதந்திரம் பெற்றதும் அதிபர் ஹபீப் போர்ஃகிபா தனது முப்பத்து மூன்று ஆண்டுகால ஆட்சியில் துனீச்யாவை செக்குலர் நாடாக மாற்ற முயற்ச்சித்தான். அவனது ஆட்சிகாலத்தில் ராஷித் அல் ஃகனோஷி மற்றும் பல இஸ்லாமிய அரசியலாளர்கள் நாட்டை விட்டு ஓடி வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர். 1989இல் ராணுவ தளபதி ஜைனுல் ஆபிதீன்பின் அலி அதிபர் ஹபீப் போர்கீபாவைக்கவிழ்த்து தான் அதிபரானார். இவர் போர்கீபாவின் இஸ்லாமிய விரோத செக்குலர் பாலிஸிக்களை மேலும் கடுமையாகக்கடைபிடித்தார். துனீசியாவில் கடுமையான செக்குலர் சட்டங்களை அமுலாக்கினார். துனீசியாவை செக்குலர் மற்றும் லிபரல் என்றழைக்கப்படுவதில் மிக மிக பெருமிதம் கொண்டான். இவனது ஆட்சிகாலத்தில் தாடி வைத்த ஒவ்வொரு ஆணும், ஹிஜாப் உடுத்தும் ஒவ்வொரு பெண்ணும் சந்தேகக்கண்ணோடு பார்க்கப்ப்ட்டார்கள். அரசு அலுவலகங்களில், கல்விக்கூடங்களில் பணிபுரிவோர் தாடி வைப்பதும். பெண்கள் ஹிஜாப்(பர்தா) உடுத்துவதும் தடை செய்யப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு பெண் ஸ்கார்ப் உடுத்தியோ அல்லது ஹிஜாப் உடன் அரசு அலுவலகம், கல்விக்கூடம், பல்கலைகழகத்திற்க்குள் நுழைந்தால் காவல் துறையினர் முதலில் அவளது ஹிஜாபை, ஸ்கார்பை நீக்குவார்கள். ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்களில் மது பகிரங்கமாக அனுமதிக்கப்பட்டது. லிபரல் வர்க்கம் ஆண் பெண் பேதமின்றி மதுக்கடைகளில் நடமாடினர் ஹோட்டல்களின் நீச்சல் குளங்களில் மேட்டுக்குடியினர் நீச்சலாடைகளுடன் எவ்வித தயக்கமுமின்றி வலம் வந்தனர். ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் இத்தகைய கோட்பாடுகளை பாராட்டி தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திருவாட்டி ஹில்லரி க்ளின்டன், ” துனீசியா முஸ்லிம் நாடுகளில் லிபரல் தன்மைக்கு ரோல்மாடலாக உள்ளது” என திருவாய் மலர்ந்தருளினார். ஜைனுல் ஆபிதீன் பின் அலி துனீசியாவை ஒரு போலீஸ் ஸ்டேட்டாகவே மாற்றினான். அந்த நாட்டின் ஒவ்வொரு இரண்டாவது குடிமகன் போலிஸின் உளவாளியாக இருந்தான். ஆதலால் அதிபர், ஆட்சியாளரைப்பற்றி குறை கூறுவது துன்பத்தை விலை கொடுத்து வாங்குவதைப் போன்றானது. பணம் படைத்தவர்கள் மேற்க்கத்திய நாகரீகத்தின் தாக்கத்தில்மூழ்கி இருந்தனர். நாட்டின் செல்வம் ,வளம் அவர்கள் பிடியில் இருந்தது.,ஏழைகள் வறுமை,பசி, வேலையின்மை, விலைவாசியேற்றம் காரணமாக தவித்தனர். ஆட்சியாளர்களின் இஸ்லாமிய விரோத போக்கினால் இஸ்லாமியவாதிகள் தத்தளித்து கொண்டிருந்தனர். மக்கள் உள்ளுக்குள் எரிமலையாக குமைந்து கொண்டிருந்தனர். இறுதியாக வெடித்த எரிமலை பின் அலியீன் ஆட்சியையும் கபளீகரம் செய்தது. துனிசியா பெரும் மக்கள் தொகை கொண்ட நாடல்ல. ஒட்டு மொத்த மக்கள் தொகை ஒண்ணேகால் அல்லது ஒன்றறை கோடி எனலாம். விஸ்தீரணமும் அற்பத்து நான்காயிரம் சதுர மைல்கள்தான். மக்கள் தொகையில் 95 சதவீதம் முஸ்லிம்கள் அய்ந்து சதவீதம் கிறுஸ்த்தவர்கள். 1956 ல் இந்த இனம் பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சஊதிஅரேபியாவில் ராணுவ மருத்துவமனையில் கணிணித்துறையில் பணிபுரியும் துனீசியாவை சேர்ந்த இளைஞர் ஹாஷிமி ஹபீப் , தாருஸ்ஸலாம் பப்ளிகேஷன்ஸ்ன் டைரக்டர் அப்துல் மலிக் முஜாஹிதிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார், “சுதந்திரம் பெற்றபின்னர் நமது ஆட்சியாளர்கள் செய்த இரண்டு நல்ல காரியங்கள்தான் குறிப்பிடத்தகுந்தவை ஒன்று கல்வித்துறையில் பாராட்டத்தக்க வகையில் முன்னேற்றம்.இரண்டாவதாக சுகாதாரம். கல்வியை பொருத்த அளவில் துனீசியா நூறு சதவீதம் வெற்றியடைந்துள்ளது. அய்ம்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் ஓரிருவர்தான் பள்ளிக்கூடம், கல்லூரிசென்று படிக்காதவராக இருப்பார். நானே கம்ப்யூட்டர் இஞ்சீனியரிங் எனது நாட்டிலேயெ முடித்தேன். உயர் படிப்புக்காக நாங்கள் அய்ரோப்பிய நாடுகளில் சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கல்வியின் தரம் அந்த அளவுக்கு உயர்ந்தது. நீண்ட காலமாக ஃபிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தினால் நாம் அரபியைப்போல் பிரெஞ்சு மொழியையும் சரளமாக படிக்கவும் பேசவும் செய்வோம். நமது நாடு இயற்க்கை வளங்களால் நிறைவு பெற்றுள்ளது. எங்கள் பல்கலை கழகங்கள் பிரெஞ்சு மொழி நூல்களால் நிரம்பி இருக்கின்றன. மிக உயர்தர மருத்துவர்கள், பொறியாளர்கள் நம்மிடம் உள்ளனர். அதனால்தான் சஊதியில் எங்கும் நீங்கள் துனீசியர்களை கீழ்மட்ட பணியாளர்களாக காண முடியாது. அமைதியும் சமாதானமும் எங்கும் இருந்தது. ஆட்சியாளர்களின் கடுமையான போக்கும் இத்ற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம். அரசியல் கைதிகளாக 1800 பேர் துனீசிய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் அரசின் கடும் தணிக்கை (censor)முறைக்குட்பட்டு இருக்கின்றன. மக்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத்திண்டாட்டம் அதிகம். வறுமை தாண்டவம் ஆடுகிறது. கொடுமையாளர்கள் அதிகமாக கொடுமை இழைக்கின்றனர். மக்கள் சுரண்டப்படுவது பரவலாக காணப்படுகிறது வலிமையற்றோர் பெரும் தொல்லக்குள்ளாகி இருக்கிறார்கள். முஜாஹித் சாஹிபின் வாயில் இருந்து ஜைனுல் ஆபிதீன் என்ற வார்ர்த்தையை கேட்டதும் ஹாஷிம் ஹபீப் உடனே,” அவன் ஜைனுல் ஆபிதீன் அல்ல நாம் அவனை “ஜைய்னுல் ஃபாஸிஃகீன்” என்கிறோம் என்றார். அதிபர் பொறுப்பில் உள்ள ஜெய்னுல் ஆபிதீன் பின் அலி தனது மனைவி லைலாவின் மீது மஜ்னுவைப்போல் பைத்தியமாக உள்ளான். சாதாரண “ஹேர் ட்ரஸ்ஸராக”(Hair Dresser) இருந்த இந்த பெண்மணி அதிபரின் மனதை கவர்ந்த்தால் “First lady” என்ற இடத்தை பிடித்துக்கொண்டாள். ஊழலில் மிக அதிகமாக முன்னேறிவிட்டாள். அதிபரை விட இருபது வயது இளையவளான இவள் அதிபரின் மீது முழு ஆதிக்கத்தை செலுத்தி தன் கைப்பிடியில் வைத்துள்ளாள். நமது அதிபரும் அவள் தாள கதிக்கு ஏற்றவாறு பம்பரமாக சுழலுகிறார். சாதாரண நிலையில் இருந்த அவளது குடும்பத்தினர் இன்று நாட்டின் பெரிய பெரிய ஷாப்பிங்க் மால்கள். பாங்குகள், மீடியா செண்டர். தகவல் தொடர்ப்பு சாதனங்கள்(tele communication) ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் ஆகியவற்றின் முதலாளிகளாகி விட்டார்கள். அதிபர் பின் அலிக்கு இஸ்லாத்தின் பெயரில் ஒரு வெறுப்பு இருந்துகொண்டே இருந்தது. இஸ்லாத்தை விட்டு அவன் வெகு தூரம் விலகியே இருந்தான். இஸ்லாமிய நாடு என்ற வகையில் “அதான்”(பாங்கு-தொழுகை அழைப்பு) தடை செய்ய அவ்னால் முடியவில்லை. ஆனால் ஹிஜாபை தடை செய்வதில்வெறியுடன் செயல்பட்டான். இஸ்லாமிய அமைப்புகள் மீது குரோதம், வன்மம் பாராட்டினான். அவர்கள் மீது கடுமையான கண்காணிப்பும் இருந்தது. யாரேனும் இஸ்லாத்தைப்ப்ற்றி பேசினால் சிறைச்சாலைக்குள் தள்ளப்படுவார்கள். அரசு உளவாளிகள் பள்ளிவாஸல்களில் வரும் தொழுகையாளிகளை தீவிரமாக கண்காணித்தனர். மஸ்ஜிதுகளின் இமாம்கள் தனது ஜும்மா குத்பாவை(வெள்ளி உரைகள்) (officers) அரசிடம் முன்னரே கொடுத்து அனுமதி பெற நிர்பந்திக்கப்பட்டனர். பணிக்கப்பட்டனர். இத்தகைய கடுமையான சூழலிலும் இஸ்லாத்தின் ஊழியர்கள் த்தத்தமது பணிகளை சிறப்பாக செய்தே வந்தனர். மக்களுக்குள்ளே ஒரு எரிமலை வெடிக்கின்ற நிலையில் இருந்தது. மக்கள் அரசின் அராஜகத்திர்க்கு ஒரு முடிவுகட்ட கிளர்ந்தெழுந்தபோது இந்த ஆட்சியாளனும் ஏனைய சஎவாதிகாரிகளிப்போல்தான் செயல் பட்டான். நிராயுதபாணியான மக்கள் மீது காவல் துறையினரின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. துப்பாக்கி குண்டுகளால் பொசுக்கப்பட்டனர். பொதுமக்களின் சீற்றம் அதிகரித்தது. இறுதியாக அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தான். பின் அலி யின் மனைவி லைலா ஊழலில் பிலிப்பைனின் மார்க்கோஸின்(maarcoase) மனைவி இமெல்டாவை(imelda) விட இருமடங்கு முன்னிருந்தாள். இவளுக்கு ” அய்ஸ்க்ரீம்” (ICE CREAM) மிகவும் பிடிக்கும். அய்ஸ்க்ரீம் வாங்குவதர்க்காகவே ஒரு (Boeing)போயிங் விமானம் இவளுக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ice creame சாப்பிட மூடு வந்தால் இந்த விமானம் அய்ரொப்பாவுக்கு சென்று இவளது மனதுக்கு புடித்த ஃப்ளேவர் உள்ள ice cream கொண்டு வந்து கொடுக்கும். துனீசியாவின் மக்கள் வறுமையில் துன்பப்பட்டுக்கொண்டிருந்தார்ள். ஆட்சியதிகார வர்க்கம் உண்டு கொழுத்து உல்லாசமாக இதுந்தார்கள் . 23 ஆண்டுகாலம் மக்கள் இந்த கூத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். இறுதியாக பட்டதாரி இளைஞன் முஹம்மத் அபூ அஸீஸின் தள்ளுவண்டியில் வந்த புரட்சி அதிகஶ்ரவர்க்கதின்23 ஆண்டுகால அராஜக ஆட்சியை பதினெட்டே நாட்களில் கவிழ்க்கும் என யாரும் எதிர்பார்த்ததேயில்லை. ஊழல் மகா ராணி லைலா தான் நாட்டை விட்டு ஓடும்போதும் தன்னுடன் துனீசிய மக்களின் செல்வத்தையும் கொள்ளையடித்து சென்றதுதான் குறிப்பிடத்தக்கது. அவள் தன்னுடன் ஒன்றறை டன் தங்கம், கோடிக்கணக்கான டாலர்களை அள்ளிச்சென்றாள் போகும்போதும் கூடமக்களின் உள்ளங்களில் எரியும் தீயில் எண்ணை வார்த்து சென்றாள்.வரக்கூடிய கால்ங்களில் சொகுசான வாழ்க்கையை வாழ வழி செய்து கொண்டே சென்றாள். இந்த பணம், செல்வம் இபர்களுக்கு நிம்மதியான வழ்ழ்க்கைய தருமா? மக்களின் இரத்தத்ததை உறிஞ்சு,அமைதியை கெடுத்து, பசி,வறுமையின் ஓலங்களின் மேல் கட்டப்பட்ட இந்த வாழ்வு இவர்களுக்கு ஆனந்த நித்திரையைத்தான் தருமா என்பது மில்ல்யன் டாலர் கேள்வி. நிச்சயமாக இல்லை. பாவப்பட்ட மக்களின் ஆழ்ந்த பெருமூச்சுகள், மரண ஓலங்கள், பரிதவிப்புகள் இக்கொடுங்கோலர்களை நிச்சயமாக நிம்ம்தியாக இருக்கவிடாது. தற்போது துனீசியாவில் தேர்தல்கள் நடத்தி புதிய ஆட்சி பொறுப்புக்கு வரும் என்று எதிர் பார்க்கபடுகிறது. இஸ்லாமிய சக்திகள் இதனால் பயன் பெருமா என்ற கேள்விக்கு பரவசத்துடன் பதில் கூறிய ஹபீப் ஹாஷிமி, “கண்டிப்பாக, கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அடக்குமுறைக்கு ஆளாகப்பட்டு சொல்லொணாத்துன்பங்கள்,இன்னல்கள், கஷ்டங்களை தாங்கி வந்தனர். மீடியாவும் இவர்களுக்கு எப்போதும் ஆதரவ்வக இருந்ததில்லை. இவர்களது சகிப்புத்தன்மை, பொறுமை,நிலை குலயாமை நிச்சயமாக பலன் தரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. இஸ்லாமிய வாதிகள் வெற்றியடைவார்கள் மக்கள் அமைதி, சாந்தி,சமாதானத்துடன் சுபிட்ச்சமான வாழ்க்கை துவங்குவார்கள் என நம்பிக்கையுடன் கூறினார்., நாமும் எதிர் பார்ப்போம். (The Sunday supplement by daily JASARAT Karachi Pakistan dated 20-26feb2011) article by Abdul Malik mujahid. Directer Darussalam publications Riyadh KSA. Translated in tamil by Ustaz zafrullah Rahmani .

Add Comment