தமிழ்நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவு வெளியிடப்பட்டது

தமிழ்நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவு வெளியிடப்பட்டது
[ வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2011, 12:53.43 PM GMT +05:30 ]
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

2011-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் Buy cheap Amoxil கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று வெளியிட்டார்.

அதில், தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.

இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001-ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011-ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது. எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011-ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது

Add Comment