தேர்தல் நேரத்தில் மட்டுமே முஸ்லிம்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்படுகிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

தேர்தல் நேரத்தில் மட்டுமே முஸ்லிம்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்படுகிறார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய் தீன் கூறினார்.

வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், மூ.மு.க. தலை வருமான ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் நேற்று பி.முட்லூர், சிதம்பரம் நகர பகுதிகளில் வாக்கு சேகரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

அதையடுத்து காதர் மொய் தீன் சிதம்பரத்தில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

மனமகிழ்ச்சி

சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சருக்கு நானிலம் போற்றும் சமூக நல்லிணக்க நாயகர் விருது வழங்கினோம்.தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்துள் ளதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் பள்ளி வாசல்களில் உள்ள மகல்லா ஜமாத்தின் முஸ்லிம்கள் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர்.

கலைஞர் 5 முறை முதல்- அமைச்சராக உள்ளார்.இதற்கு முன்பு இருந்த 4 முறையும் ஏழை மக்களுக்காக உழைத்து உள்ளார்.இதை யெல்லாம் அரசியலுக்காக செய்ய வில்லை.தற்போது உள்ள ஆட்சியில் ஏழை மக்கள் மனமகிழ்ச்சியில் உள்ள னர்.

இடஒதுக்கீடு

மீண்டும் கருணாநிதி 6-வது முறையாக முதல்- அமைச் சராக வருவார். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நல்லிணக்கமாக உறவு இந்த காலத்தில் உள்ளது போல் எந்த காலத்திலும் இல்லை.உறவு வலிமை பெற்றதால் தமிழகம் வளம் பெற்றுள்ளது.கருணாநிதி முதன் முறையாக முதல்-அமைச்சராக வந்த போது மிலாது நபிக்கு விடு முறை அளித்தார்.

இது எந்த நாட்டிலும் இல்லை.அடுத்து வந்த ஜெயலலிதா அதனை நீக்கி னார்.2-வது முறையாக கருணாநிதி முதல்- அமைச் சராக இருந்த போது உருது அகாதமியை உருவாக் கினார்.பின்னர் முஸ்லிம்கள் 7 பிரிவினரை மிகவும் பிற் படுத்தப்பட்டோர் பட்டி யலில் சேர்ந்து 31/2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார்.எங்கள் கோரிக்கைகளை ஏற்று கண்காணிப்பு கமிட்டியும் அமைத்து உள்ளார்.தற்போது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வைகோ ஆதரவு

தர வேண்டும்

ஆனால் ஜெயலலிதாவுக்கு முஸ்லிம் பிரச்சினை என்ன என்றே தெரியாது.முஸ்லிம்களின் உணர்வுகளும் புரியாது.தேர்தல் நேரத்தில் மட்டும் ஜெயலலிதா முஸ்லிம் களை பற்றி பேசுகிறார்.கவலைப்படுகிறார்.தி.மு.க.கூட்டணிக்கு வைகோ வர வேண்டும்.கடந்த 2004-ம் ஆண்டு தி.மு.க.கூட்டணிக்கு வந்த வைகோவை தென்றலாக உள்ள கலைஞருடன், புயலாக உள்ள வைகோ கூட்டணி வைத்துள்ளார் என்று வரவேற்றேன்.ஆகவே online pharmacy without prescription அவர் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.

கலைஞரின் இலவச திட்டங்கள் மக்களை வாழ வைக்கிறது.இது கலைஞர் பொருளாதார திட்டமாகும்.

இவ்வாறு மாநில தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.

பேட்டியின் போது மூ.மு.க. இளைஞரணி தலைவர் ரவி வாண்டையார், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் சபிகுர்ரகுமான், மாவட்ட தலைவர் முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Add Comment