திமுக.,அரசு சிறுபான்மையினர் உணர்வுடன் ஒன்றி இருக்கும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர்

திமுக.,அரசு சிறுபான்மையினர் உணர்வுடன் ஒன்றி இருக்கும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர்

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011,03:16 IST

கடையநல்லூர் : திமுக அரசு தான் சிறுபான்மையினர் உணர்வுடன் ஒன்றிப்போய் இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத் தெரிவித்தார். கடையநல்லூரில் காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்சை ஆதரித்து மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாவட்ட நிர்வாகிகள் கடையநல்லூரில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், டாக்டர் முகமதுஷாபி, மாவட்ட செயலாளர் செய்யது முகமது, வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து முகமது, தொண்டரணி செயலாளர் செய்யது இப்ராகிம், ஹைதர் அலி, மசூது உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத் நிருபர்களிடம் கூறியதாவது:- “”இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. முஸ்லிம் லீக் தலைவர் காதர்முகைதீன் வரும் 4ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். 6ம்தேதி அப்துல்ரகுமான் எம்.பி., மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அனைத்து தொகுதிகளிலும் திமுக அணி வெற்றிபெற முஸ்லிம் லீக் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதிமுக கட்சியின் பொதுசெயலாளர் ஜெயலலிதா முஸ்லிம்களின் உள்ளங்களை புண்படும் வகையில் ஷரியத் சட்டத்திற்கு விரோதமாக buy Bactrim online பொது சிவில் சட்டம் முயற்சிக்கு ஆதரவாக பேசினார். மதமாற்ற தடை சட்டம், ஆடு மாடுகளை பலியிட தடை உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தவர். அவரது ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வந்துவிடக் கூடாது. திமுக தலைமையிலான அரசு அமைந்தால் சிறுபான்மையினரின் உணர்வுகள் பிரதிபலிக்க முடியும். அதற்காக தீவிரமாக ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறோம். சச்சார் கமிட்டியை கொண்டு வந்தது காங்., அரசு. ஆனால் அதனை விவாதிக்க செய்யாமல் தடுத்து வருவது பா.ஜ. ஜெயலலிதாவை பொறுத்தவரை பா.ஜ.,வுடன் தொடர்புடையவர். நரேந்தரிமோடியை வாழ்த்துவதற்கு தனி விமானத்தில் சென்றவர். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 3.5 சதவீதத்தை 5 சதவீதமாக ஆக்குவோம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவை பொறுத்தவரை அவரது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடம் தராமல் இருந்தார். திமுக அரசு சிறுபான்மையினர் உணர்வுடன் ஒன்றிப்போன ஒன்றாகும். எனவே சிறுபான்மையின மக்கள் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என்றார்.

Add Comment