இன்றைய 2வது போட்டியில் பிரான்ஸ்-உருகுவே மோதல்

உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் 2வது ஆட்டத்தில் இன்று இரவு பிரான்ஸும், உருகுவேயும் மோதுகின்றன.

இருவருமே முன்னாள் சாம்பியன்கள்தான். 1930, 1950 ஆகிய ஆண்டுகளில் உருகவே சாம்பியனாக இருந்தது. 1998ல் சாம்பியன் ஆனது பிரான்ஸ்.

இரு அணிகளும் கடைசியாக 2002 உலகக் கோப்பைப் போட்டியின் போது சந்தித்தன. அப்போது கோல் அடிக்காமல் இரு அணிகளும் போட்டியை டிரா செய்தன.

இரு Buy Amoxil அணிகளுமே புகழ் பெற்ற கால்பந்துப் பாரம்பரியத்தைக் கொண்டவையாகும். இருப்பினும் இந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு வருவதற்காக இரு அணிகளுமே கடுமையாக போராடியே வந்துள்ளன.

உருகுவே அணியின் டியகோ போர்லான் ஆட்டம் அனைவரிடமும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பிரான்ஸின் வில்லியம் காலாஸின் ஆட்டமும் கவனிப்புக்குரியதாக மாறியுள்ளது.

கடந்த 16 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே உருகுவே வென்றுள்ளது. இது உருகுவே அணிக்கு பின்னடைவான விஷயமாகும்.

போட்டி குறித்து பிரான்ஸ் நடுக்கள வீரர் ஜெரிமி டோலாலன் கூறுகையில், இந்தப் போட்டியில் எங்களது பலத்தை உரைத்துப் பார்க்கப் போகிறோம். எது நடந்தாலும் அது கெளரவமானதாக இருக்க வேண்டும்.

கடந்த 2002, 2006 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் தொடக்க ஆட்டங்களில் பிரான்ஸ் தோல்வியடைந்தது வரலாறு. அந்த வரலாற்றை இந்த முறை உடைக்க பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது. அதை உருகுவே அனுமதிக்குமா என்பது எதிர்பார்ப்புக்குரியதாகும்.

Add Comment