ஜனநாயக முற்போக்கு கூட்டணியே வெற்றிபெறும் ஆறாவது முறையாக கலைஞர் முதல்வராவார் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்த லில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும். ஆறாவது முறையாக கலை ஞர் முதல்வராவார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

நாகபட்டினம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிடும் முஹம்மது ஷேக் தாவூதை ஆதரித்து பிரச்சாரம் செய்த பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் நாகூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் குறிப்பிட்டதாவ:

நடைபெறபோகின்ற தமிழக சட்டமன்ற தேர்த லில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 234 தொகுதி களிலும் போட்டியிடுகின் றது. இந்த கூட்டணி தி.மு. கழக தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் ஐந்து ஆண்டு களாக நடைபெற்ற ஆட்சியில் செய்த நன்மை கள் வீட்டின் கதவை தட் டிக் கொண்டு உள்ளே சென்றுள்ளது. மிக அற்புதமான திட்டங்கள். இப்பொழுது 167 வாக்குறு திகள் சொல்லப் பட்டுள் ளன. எதிர்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான கூட இந்த ஆட்சியில் பய ணடைந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

கலைஞரின் திட்டமான கான்கிரீட் வீடு கம்யூ னிஸ்ட் வாழும் பகுதிக்குத் தான் முதலில் சென்றது.

மக்களின் இதயத்தில் இந்த கூட்டணிதான் உள் ளது. ஜனநாயக முற் போக்கு கூட்டணி பற்றி மக்களே பெருமையாக பேசுகின்றனர். இந்த கூட்டணிக்கு மக்கள் அலை வீசுகிறது. காரணம், கன்னியத்தோடும், மரி யாதை மிக்க தலைவரு மான கலைஞர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்த பெருமை ஏற்படுத்தி தந்த தலைவர் இவருக்கு ஈடாக தமிழகத் தில் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை. ஒரு அற் புதமான தலைவர்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுக்கு பிறகும் கிடைக்க பெறாத தலைவர். எதிர் அணியில் உள்ளவர் களுக்கு அந்த தகுதியில்லை. கோடநாட்டில் நூறு ஆண்டுகளாக இருந்த பொது வழியை ஆக்கிர மித்து அடைத்து விட்டார் கள். அந்த வழியாக சென்றவர்கள் வழி அடைக் கப்பட்டதால் ஐந்து கிலோ மீட்டர் வரை சுற்றி செல் லும் நிலை ஏற்பட்டது.

இப்பொழுது சுப்ரீம் கோர்ட் தீர்பின்படி காமரா ஜர் நகர், அண்ணாநகர் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரவு பகல் முழுவதும் சென்றுவர பாதை திறந்து இருக்க வேண்டும் என்று கூறியுள் ளது. குடும்பமே இல்லாதவ ருக்கு இத்தனை பங்களா எதற்கு? கலைஞர் தனது வாழ்க் கைக்கு பிறகு கோபாலபுரம் வீட்டை பொது நலனுக்கு பயன்படுத்த எழுதி தந்தவர். அவரை கொச்சை படுத்தி பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழக மக்களை திசை திருப்பி ஏமாற்ற முடியாது.

காயிதெ மில்லத், காமராஜர், ராஜாஜி ஆகி யோர் காலங்களில் என்ன நன்மை ஏற்பட்டதோ அது போன்று கலை ஞர் செய்த சாதனை மிக பெரிய அற்பு தமானவை.

ஒவ்வொரு அரிசியும் கலைஞர் ஆட்சியை சொல் லும் என்று ராமதாஸ் கூறி யுள்ளார். கலைஞர் தி.மு.க. தலைவர் மட்டும் அல்ல எல்லா சமுதாயத்திற்கும் தலைவர். கலைஞர் ஆட்சி யில் தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத் துள்ளார். ஜாதி, மதங் களுக்கு அப்பாற்பட்ட தலைவர்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பாக எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி கலைஞருக்கு நானி லம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது அளித் தோம். கலைஞர் முதல்வர் ஆனது முதல் சிறுபான்மை மக்களுக்கு நல்லது செய்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளுக்கு விடுமுறை விடுத்து இருப்பது நபி களுக்கு பெருமை சேர்ப் பது அல்ல, அவரது கொள்கைகளை மக் களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைய பெற்றுள்ளது.

உருது மொழி பேசும் தக்னி முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட் டியலில் சேர்த்தவர் கலை ஞர்.

நீண்ட நாள் கோரிக்கை யான இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர் தான்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேட்டவர் ஜெயலலிதா தான். இப்பொழுது நான் ஆட்சிக்கு வந்தால் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு தரு வேன் என்கிறார். சிறு பான்மை மக்களுக்கு நீல கண்ணீர் வடிப்பது தேர் தல் நேரத்தில் சிலரது வாடிக்கை. தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என் றால் நன்மை செய்தவரை தான் நம்ப முடியும். ஏழை-எளியோர் ஒவ்வொருவரும் உள பூர்வமாக மன மகிழச் சியுடன் வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பாடியது போல, கலைஞர் காலமெல் லாம் யோசித்து இலவசம் என்று கொடுப்பது கெடுப் பதுற்கு அல்ல, ஏழையை வேதனை குழியில் விழாமல் தடுப்பதற்கு சென்ற ஐந் தாண்டுகளில் ஏழ்மை மாறி பலர் இப்பொழுது வசதி படைத்தவர்களாக மாறி உள்ளனர்.

அரசாங்க நல திட்டங் களால் நன்மையடைந்து இப்பொழுது அவர்கள் கொடுக்கின்ற நிலைமைக்கு மாறியுள்ளனர். கலைஞரின் திட்டம் அற்புதமான பொருளா தார திட்டம். பிற மாநிலங் களில் இப்பொழுது அவ ரின் திட்டம் காப்பியடிக் கப்பட்டுள்ளது. மக்களின் மனதில் எழுந்து அலை யாக மாறியுள்ளது. அலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

234 தொகுதியிலும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி வெற்றி பெறும். ஆறாவது முறையாக கலை ஞர் ஆட்சி அமைப்பார். மனசாட்சி இருப்பவர்கள், இதயத்தை தொட்டு பார்த்து கலைஞருக்கு வாக்களிக்க வேண்டும்.

வைகோ ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கலைஞர் தலைமையிலான கூட்டணிக்கு வரவேண்டும். கலைஞர் ஆட்சி நன்மை யாக இருந்ததா, இல்லையா என்று யோசித்து பாருங் கள். தமிழ்நாட்டில் அரசியல் ஜாதி, மத கலவரங்களை ஏற்படுத்தி வென்றவர்கள் இல்லை. ஜாதி,மதம் பார்த்து தமிழக மக்கள் ஓட்டளிப்பது இல்லை.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் buy Doxycycline online மொகிதீன் தெரிவித்தார்.

பேட்டியின்போது, மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீ குர் ரஹ்மான், நாகை தெற்கு மாவட்ட செய லாளர் எம்.ஓ.எம். செய்யது அலி, துணை செயலாளர் ஜான் செய்யது மீரான், மாநில பேச்சாளர் நாவலர் கவுஸ் மொய்தீன், அப்துல் வகாப், ஆப்பனூர் பீர் முஹம்மது, அறமுரசு அப்துல் காதர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Add Comment