சென்னை தீவு திடலில் நாளை சோனியா காந்தி-முதல்வர் கலைஞர் கூட்டு பிரச்சாரம் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் பங்கேற்கிறார்

சென்னை தீவுத்திடலில் நாளை (செவ்வாய்க் கிழமை) நடைபெறவுள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முதல்வர் கலைஞர் கலந்து கொள்ளும் தேர்தல் பிர சார பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீவுத் திடலில் மட்டும் பாதுகாப் புக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.

ஒரே மேடையில் பிரசாரம்

அகில இந்திய காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கலைஞர் ஆகியோர் நாளை (செவ் வாய்க்கிழமை) சென்னை தீவுத்திடலில் ஒரே மேடை யில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகி றார்கள்.

இதில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செய லாளரும் மாநில தலைவ ருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவள வன், கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள் ளிட்ட கூட்டணி கட்சி தலைவர் களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகி றார்கள். இதனால் இந்த கூட்டத் துக்கு பிரமாண்ட ஏற் பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது. பாதுகாப்பு ஏற்பாடு களும் மிகவும் தீவிரமாக இருக்கும். தீவுத்திடலில் மட்டும் சுமார் ஆயிரம் Buy cheap Levitra போலீசார் பாதுகாப்புக்காக குவிக் கப்படுகிறார்கள். பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று இரவு கேட்ட போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சுற் றுப்பயணம் பற்றிய முழு விவரங்களும் அதிகாரப் பூர்வமாக நாளைதான் (இன்று) கிடைக்கும். அதன் பிறகு பாதுகாப்பு ஏற்பாடு கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சுற்றுப்பயண விவரம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து விமா னத்தில் சென்னை விமான நிலையம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு ஹெலிகாப் டரில் புதுச்சேரி செல் கிறார். புதுச்சேரியில் தேர் தல் பிரசாரம் செய்கிறார். புதுச்சேரியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, மாலை 5 மணி அளவில் சென்னை தீவுத்திடல் அருகே சென்னை துறை முகத்துக்குள் இருக்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங் கிருந்து காரில் தீவுதிடல் சென்றடைகிறார்.

பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி விட்டு, மாலை 6.30 மணி அளவில் மீண்டும் காரில் அடையாறு ஐ.என்.எஸ். தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்ட ரில் சென்னை விமான நிலையம் சென்றடை கிறார். பின்னர் விமா னத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு செல் கிறார். ஒரு வேளை மாலை 6.30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க முடியாமல் காலதாமதமாகி விட்டால், சோனியாகாந்தி தீவுத்திட லில் இருந்து காரில் சென்னை விமான நிலை யம் செல்வார். அவர் காரில் விமான நிலையம் செல்லும் பாதையில், வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்படும்

Add Comment