என்று தான் நாம் கற்க போகிறோமோ ..!!!!!

“சில சோகங்கள்
நம்மை
அசைத்து பார்க்கும் ..
அழுதால்.,
தோற்போம் …
அடக்கினால்.,
ஜெயிப்போம்…
அவர்கள் அடக்கினார்கள்…
நாளை ஜெயிப்பார்கள்….

வரிசையில்
வருபவர்கள்..கோழைகளல்ல.,
இடையில்
இணைபவர்கள் ..வீரர்களல்ல.,
அவர்கள் .,
வரிசைகளுக்கு..
இலக்கணம் .,.,

கட்டிடங்கள் அப்படியே ..
சாய்ந்தன ..
கடைசி வரை ஒரு
செங்கல் கூட
தனியே வரவில்லை ..
கட்டிடக்கலையில்
கால் பதித்தார்கள் …
ஒரு நாளில்,
சுனாமியையும்
ஜெயிப்பார்கள்.,

Buy cheap Cialis justify;”>களவு ,
கொள்ளை…பற்றி
அவர்களுக்காவது..
கடைசி வரை ..
தெரியாமல்
போகட்டும் ….,

ஊடகங்கள்
உண்மையை உணர்த்தின …
பரபரப்பிற்கும்
பணத்திற்கும் பின்னால்
ஓடவில்லை …

சிறுவர்கள் முதல்
கிழவர்கள் வரை
பதறவில்லை …
பலமனார்கள்….

ச்ச…
என்று தான் நாம்
கற்க போகிறோமோ ..!!!!!

-சு.அப்துல் ஹக்கீம் .,திருநெல்வேலி

Add Comment