30,000 பேருக்கு வேலைவாய்ப்பு: இன்போசிஸ் அறிவிப்பு

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் இந்த ஆண்டு 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்காவின் வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, உலகப் பொருளாதார மந்தத்துக்கு காரணமாக அமைந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஐ.டி. துறை பெரும் பாதிப்புக்குள்ளானது. பல லட்சம் பேர் வேலைகளை இழந்தனர்.

இந் நிலையில், தற்போது பல்வேறு நாடுகள் மெல்ல மெல்ல மீட்சிக்குத் திரும்புகின்றன. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு திருப்திகரமாக இல்லாவிட்டாலும், பொருளாதார வளர்ச்சி குறிப்பிடும் உள்ளது.

இதனால், சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. இதனால் புதிய ஊழியர் நியமனத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன முன்னணி ஐ.டி. நிறுவனங்கள்.

இன்ஃபோஸிஸ் நிறுவனம் 30,000 பேரை புதிதாக பணியமர்த்துகிறது.

Lasix online justify;”>இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி க்ருஷ் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலம் திருவனந்தபுரத்தின் டெக்னோபார்க் அருகே அமைந்துள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 30,000 பேருக்கு மேல் பணியில் அமர்த்தவிருக்கிறோம். வரும் நாட்களில் கேரளா பற்றிய கண்ணோட்டமே மாறப் போகிறது. நாட்டின் மிகப் பெரிய ஐடி மையமாக கேரளா மாறப் போகிறது என்றார்.

Add Comment