செழிப்பு மிகுந்த தொகுதியாக்குவேன் : பீட்டர் அல்போன்ஸ் உறுதி

“மத்திய, மாநில அரசின் நிதியுதவிகளை அதிகமாக பெற்று கடையநல்லூர் தொகுதியை செழிப்பு மிகுந்த தொகுதியாக விளங்கிட ஏற்பாடு செய்வேன்’ என தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். கடையநல்லூர் தொகுதியில் சமத்துவபுரம், மங்களாபுரம், புதுக்குடி, கம்பனேரி, கரடிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் அப்பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் துவங்கப்பட்ட திட்ட பணிகள் குறித்தும் வாக்காளர்களிடம் விரிவாக எடுத்து கூறி பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியதாவது:- “”கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் அமைந்துள்ள 234 தொகுதிகளில் கடையநல்லூர் தொகுதி தனி முத்திரை பதித்த தொகுதியாக மாற்றி காட்டப்பட்டுள்ளது. அந்தளவிற்கு மத்திய மாநில அரசுகளின் உதவியோடு மக்கள் எதிர்பார்ப்புடன் விடுக்கப்பட்ட அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்பட்டு பணிகள் நடந்துள்ளன. நான்கு வழி சாலைகளை போன்று புன்னையாபுரத்தில் இருந்து செங்கோட்டை எஸ் வளைவு வரை 10 மீட்டர் அகலம் கொண்ட சாலைகளாக அகலப்படுத்தப்பட்டன. தொகுதியில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எட்டிபார்க்காமல் இருந்த பகுதிகளில் கூட போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. குறிப்பாக கடையநல்லூரிலிருந்து திருவனந்தபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் நலன் கருதி அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்ய உங்கள் மத்தியில் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் மூலம் நான் மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டால் மத்திய மாநில அரசுகளின் நிதியுதவிகளை அதிகமாக பெற்று வந்து கடையநல்லூர் தொகுதியை செழிப்பு மிகுந்த தொகுதியாக விளங்கிட ஏற்பாடு செய்வேன்” என்றார். வேட்பாளருடன் மாவட்ட துணை தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், முன்னாள் யூனியன் தலைவர் அய்யாதுரை, மாநில காங்., செயலாளர் ஆலடிசங்கரையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் புலவர் செல்வராஜ், சுந்தரேசபுரம் சுந்தரய்யா, வட்டார தலைவர்கள் கிளாங்காடு மணி, ஆலங்குளம் செல்வராஜ், தொகுதி இளைஞர் காங்., தலைவர் பண்பொழி வினோத், திமுக ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை, இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, buy Amoxil online சுபாஷ் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Add Comment