அதிரடி ரெய்டு …போலி டாக்டர்கள் சிக்கினர்

தமிழகம் Buy Viagra முழுவதும் போலி டாக்டர்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். பல கிளினிக்குகள் இழுத்து மூடப்பட்டன. காலவதியான மாத்திரை, உணவில் கலப்படம், உள்ளிட்ட சோதனை முடிந்து வருவதற்குள் போலி டாக்டர் ஒழிப்பு நடவடிக்கை தமிழகத்தில் ஜரூராக சூடு பிடித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த போலி டாக்டர் சோதனையில் பலர் சிக்கினர். அவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் மீண்டும் இந்த போலி டாக்டர்கள் பணியில் செம்மையாக செய்ய முயற்சித்துள்ளனர். என்பது கூடுதல் தகவல்.

பெண்களும் சளைத்தவர்கள் அல்ல : இந்நிலையில் இன்று ( வெள்ளிக்கிழமை ) சுகாதார துறை இயக்குனர்கள் உத்தரவின் பேரில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம் , விருதுநகர், திருச்சி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் போலீசார் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் திருநெல்வேலியில் மட்டும் 5 பெண்கள் உள்பட 34 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இன்னும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் எத்தனை பேர் கைது என்ற விவரம் மாலைக்குள் தெரிந்து விடும்.

நெல்லையில் நான்குனேரியில் மட்டும் 16 பேரும், வள்ளியூர், ராதாபுரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 18 பேரும் கைது செய்ப்பட்டிருக்கின்றனர். ஊசி, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ரகசிய வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Add Comment