துபாயில் முஹ‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ துவ‌க்க‌ விழா

துபாயில் முஹ‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ துவ‌க்க‌ விழா

துபாய் : துபாயில் கீழ‌க்க‌ரை முஹ‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ துவ‌க்க‌ விழா 31.03.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து.

துவ‌க்க‌மாக‌ ப‌ஷீர் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஜாஹிர் ஹுசைன் த‌லைமை வ‌கித்தார். ஹாரூண் ர‌ஷீத் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

முஹ‌ம்மது ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் பேராசிரிய‌ர் ஏ. அலாவுதீன் முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தை துவ‌க்கி வைத்து க‌ல்லூரித் த‌லைவ‌ர் அல்ஹாஜ் டாக்ட‌ர் எஸ்.எம். ஹாமித் அப்துல் காதிர் அவ‌ர்க‌ளின் வாழ்த்துரையினை வாசித்தார்.

க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் அவ‌ர்க‌ளுக்கு முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌர‌விக்க‌ப்ப‌ட்டார்.

முத‌ல்வ‌ர் அலாவுதீன் அவ‌ர்க‌ள் த‌மிழ‌க‌த்தில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் நானூறுக்கும் மேற்ப‌ட்ட‌ பாலிடெக்னிக் க‌ல்லூரிக‌ளில் சிற‌ப்பிட‌த்தில் இருந்து வ‌ருகிற‌து. இத‌ற்கு க‌ல்லூரி நிர்வாக‌மும், ஆசிரிய‌ப் buy Lasix online பெரும‌க்க‌ளும், மாணாக்க‌ர்க‌ளும், முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரின் ஒட்டுமொத்த‌ ஆத‌ர‌வு தான் என்றால் மிகையாகாது.

க‌ல்லூரி நிர்வாக‌க்குழு அமீர‌க‌த்தில் முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ம் துவ‌க்குவ‌த‌ற்கு அனும‌திய‌ளித்த‌மைக்கும், அஸ்கான் டி பிளாக்கில் இச்சிற‌ப்பு மிகு நிக‌ழ்வு ந‌டைபெற‌ இட‌ம் வ‌ழ‌ங்கி உத‌விய‌ ஈடிஏ அஸ்கான் ஸடார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குந‌ர் அல்ஹாஜ் சைய‌து எம் ஸ‌லாஹுதீன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார்.

அத‌னைத் தொட‌ர்ந்து முஹ‌ம்ம‌து க‌னி, ஜாஹிர் உசேன், ஹாரூண் ர‌ஷீத், க‌ஸ்ஸாலி, ப‌ஷீர் உள்ளிட்ட‌ ஏழு பேர் முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ அமைப்பின் ஒருங்கிணைப்பாள‌ர்க‌ளாக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்டன‌ர். பின்ன‌ர் க‌ல‌ந்துரையாட‌ல் ந‌டைபெற்ற‌து. ந‌ன்றியுரை ம‌ற்றும் துஆவிற்குப் பின்ன‌ர் நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து.

முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ம் குறித்த‌ விப‌ர‌ங்க‌ளை 055 405 9982 / 050 7585458 எனும் அலைபேசி எண்ணில் தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

Add Comment